Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பைபிள் படிப்பு நடத்தும்போது தவிர்க்க வேண்டிய படுகுழிகள்

பைபிள் படிப்பு நடத்தும்போது தவிர்க்க வேண்டிய படுகுழிகள்

அதிகமாக பேசுவது: எல்லாவற்றையும் நீங்களே விளக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். மக்கள் யோசித்து சரியான முடிவு எடுப்பதற்காக இயேசு கேள்விகளைக் கேட்டார். (மத் 17:24-27) பைபிள் படிப்பவர் என்ன புரிந்துகொண்டார்... அவருடைய நம்பிக்கைகள் என்ன... என்பதை தெரிந்துகொள்வதற்கும் படிப்பை உற்சாகமாக நடத்துவதற்கும் கேள்விகள் உதவுகின்றன. (be 253 ¶3-4) கேள்வி கேட்ட பிறகு பதில் சொல்லும் வரை பொறுமையாக காத்திருங்கள். ஒருவேளை தப்பான பதில் சொன்னால், நீங்கள் உடனே சரியான பதிலை சொல்லாதீர்கள். கூடுதலான கேள்விகளைக் கேட்டு அவர்களே சரியான முடிவுக்கு வர உதவி செய்யுங்கள். (be 238 ¶1-2) புதிய விஷயங்களை பைபிள் படிப்பவர் புரிந்துகொள்ளும் வேகத்தில் பேசுங்கள்.—be 230 ¶4.

குழப்புவது: உங்களுக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்ற ஆசையைக் கட்டுப்படுத்துங்கள். (யோவா 16:12) பாராவில் இருக்கும் முக்கிய விஷயத்தின் மீது கவனம் செலுத்துங்கள். (be 226 ¶4-5) கூடுதலான விளக்கங்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும், அவற்றை சொன்னால் முக்கிய குறிப்பு புரியாமல் போய்விடும். (be 235 ¶3) பைபிள் படிப்பு படிப்பவர் அந்த பாராவில் இருக்கும் முக்கிய குறிப்பை புரிந்துகொண்டால் அடுத்த பாராவுக்கு போய்விடுங்கள்.

வெறுமனே பாராக்களை நடத்தி முடிப்பது: ஒருவருடைய மனதை தொடும் விதத்தில் படிப்பை நடத்த வேண்டும்; வெறுமனே பாராக்களை முடிக்க வேண்டும் என நினைக்காதீர்கள். (லூ 24:32) கடவுளுடைய வார்த்தைக்கு நிறைய சக்தி இருப்பதால் ஒவ்வொரு பாடத்தில் இருக்கும் முக்கிய வசனங்களையும் பயன்படுத்துங்கள். (2கொ 10:4; எபி 4:12; be 144 ¶1-3) சுலபமாக புரிந்துகொள்ளக்கூடிய உதாரணங்களைப் பயன்படுத்துங்கள். (be 245 ¶2-4) பைபிள் படிப்பவர் எதிர்ப்படும் பிரச்சினைகளையும் அவருடைய நம்பிக்கைகளையும் ஞாபகத்தில் வைத்து அதற்கு ஏற்ற மாதிரி படிப்பை நடத்துங்கள். இதுபோன்ற கேள்விகளை அவரிடம் கேளுங்கள்: “கத்துக்கிட்ட விஷயங்கள பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?” “யெகோவாவ பத்தி இதுல இருந்து என்ன கத்துக்கிட்டீங்க?” “இந்த அறிவுரையை வாழ்க்கையில கடைப்பிடிச்சா என்ன நன்மை கிடைக்கும்னு நினைக்கிறீங்க?”—be 238 ¶3-5; 259 ¶1.