Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஊழியத்தில் பிள்ளைகளைப் பார்த்தால்...

ஊழியத்தில் பிள்ளைகளைப் பார்த்தால்...

வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சின்ன பிள்ளையை பார்த்தால் அந்த பிள்ளையின் அப்பா-அம்மாவிடம் பேச முடியுமா என்று கேளுங்கள். அப்படி கேட்பதன் மூலம் பிள்ளையின் பெற்றோர்களுக்கு மரியாதை காட்டுகிறோம். (நீதி 6:20) ஒருவேளை அப்பா-அம்மா இல்லாதபோது வீட்டுக்குள் வரச் சொன்னால் நாம் போகக் கூடாது. அடுத்த முறை வருவதாக சொல்லலாம்.

ஒருவேளை 15-19 வயதுள்ள இளைஞராக இருந்தால்கூட அப்பா-அம்மா இருக்கிறார்களா என்று கேட்பது நல்லது. படிப்பதற்கு பத்திரிகையோ புத்தகமோ கொடுத்தால் அப்பா-அம்மா ஏதாவது சொல்வார்களா என்று கேட்கலாம். அவர்கள் எதுவும் சொல்ல மாட்டார்கள் என்றால், படிக்க ஏதாவது கொடுங்கள். கூடுதலாக தெரிந்துகொள்ள jw.org-ஐ பார்க்க சொல்லுங்கள்.

ஆர்வமாக கேட்ட ஒரு இளைஞரை திரும்பவும் பார்க்கும்போது அவனுடைய அப்பா-அம்மாவை சந்திக்க முடியுமா என்று கேளுங்கள். அப்போதுதான், நாம் எதற்காக அவர்களை பார்க்க வந்திருக்கிறோம் என்பதை விளக்க முடியும். அதோடு, குடும்பங்களுக்கு பைபிள் தருகிற நம்பகமான ஆலோசனைகளைச் சொல்லவும் முடியும். (சங் 119:86, 138) நாம் மதிப்பு மரியாதை காட்டுவது பெற்றோர்களுக்கு நல்ல சாட்சியாக இருக்கும்; அடுத்த முறை அவர்களுக்கு நற்செய்தியை சொல்ல நமக்கு வாய்ப்பும் கிடைக்கும்.—1பே 2:12.