செப்டம்பர் 10-16
யோவான் 3-4
பாட்டு 142; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“சமாரியப் பெண்ணிடம் இயேசு சாட்சி கொடுக்கிறார்”: (10 நிமி.)
யோவா 4:6, 7—ரொம்பவே களைப்பாக இருந்தபோதிலும், தானாகவே முன்வந்து சமாரியப் பெண்ணிடம் இயேசு பேசினார் (“களைப்பாக இருந்ததால்” என்ற யோவா 4:6-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
யோவா 4:21-24—சாதாரணமாகப் பேச ஆரம்பித்தது, அருமையான விதத்தில் சாட்சிகொடுப்பதில் போய் முடிந்தது
யோவா 4:39-41—இயேசு எடுத்த முயற்சியால், சமாரியர்களில் நிறைய பேர் அவர்மேல் விசுவாசம் வைத்தார்கள்
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
யோவா 3:29—இந்த வசனத்தை நாம் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்? (“மணமகனின் தோழன்” என்ற யோவா 3:29-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
யோவா 4:10—‘வாழ்வு தரும் தண்ணீர்’ என்று இயேசு சொன்னபோது, சமாரியப் பெண் அதை எப்படிப் புரிந்துகொண்டாள், ஆனால் இயேசு எதைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார்? (“வாழ்வு தரும் தண்ணீரை” என்ற யோவா 4:10-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
யோவான் 3, 4 அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) யோவா 4:1-15
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள்.
முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
பேச்சு: (6 நிமிடத்திற்குள்) wp16.2-E பக். 9 பாரா. 1-4—பொருள்: யோவான் 4:23-ன் விளக்கம் என்ன?
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—சாட்சி கொடுப்பதற்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் உரையாடலை ஆரம்பியுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். குறைந்தபட்சம் ஒரு தடவையாவது இப்படிப் பேசுவதற்கு இந்த வாரத்தில் முயற்சி செய்யும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை அடுத்த வார கூட்டத்தில் பிரஸ்தாபிகள் சொல்லலாம்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 7 பாரா. 19-23, பெட்டிகள் பக். 75, 76-77, 77
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 103; ஜெபம்