Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோவான் 3-4

சமாரியப் பெண்ணிடம் இயேசு சாட்சி கொடுக்கிறார்

சமாரியப் பெண்ணிடம் இயேசு சாட்சி கொடுக்கிறார்

4:6-26, 39-41

இயேசுவால் எப்படிச் சந்தர்ப்ப சாட்சி கொடுக்க முடிந்தது?

  • 4:7—கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிச் சொல்லியோ, தான்தான் மேசியா என்பதைப் பற்றிச் சொல்லியோ இயேசு உரையாடலை ஆரம்பிக்கவில்லை; குடிப்பதற்குத் தண்ணீர் தரும்படி கேட்டுத்தான் பேச ஆரம்பித்தார்

  • 4:9—அந்தச் சமாரியப் பெண்ணின் இனத்தை வைத்து இயேசு முடிவுகட்டிவிடவில்லை

  • 4:9, 12—சர்ச்சையை ஏற்படுத்துகிற கேள்விகளை அவள் கேட்டபோதிலும், அந்த உரையாடலை இயேசு சரியான பாதையில் கொண்டுபோனார் —cf பக். 77 பாரா 3

  • 4:10—அந்தப் பெண்ணின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் ஒரு விஷயத்தை உதாரணமாகச் சொல்லி இயேசு உரையாடலை ஆரம்பித்தார்

  • 4:16-19—அந்தப் பெண் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்துவந்தபோதிலும், இயேசு அவளை கண்ணியமாக நடத்தினார்

சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதன் முக்கியத்துவத்தை இந்தப் பதிவு எப்படிக் காட்டுகிறது?