கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
எதுவும் வீணாக்கப்படவில்லை
இயேசு அற்புதமான விதத்தில் 5,000 ஆண்கள் உட்பட பல பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் உணவளித்த பின்பு, இப்படிச் சொன்னார்: “எதுவும் வீணாகாதபடி, மீதியான ரொட்டித் துண்டுகளைச் சேகரியுங்கள்.” (யோவா 6:12) அந்த உணவை வீணாக்காமல் இருப்பதன் மூலம், யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுகளுக்கு நன்றியோடு இருந்ததை இயேசு காட்டினார்.
நன்கொடைகளை ஞானமாகப் பயன்படுத்துவதன் மூலம், இயேசுவைப் போலவே நடந்துகொள்ள ஆளும் குழு இன்று கடினமாக முயற்சி செய்கிறது. உதாரணத்துக்கு, வார்விக், நியு யார்க்கில் இருக்கிற உலகத் தலைமை அலுவலகத்தைக் கட்டியபோது, நன்கொடைகளை நல்ல முறையில் பயன்படுத்தும் விதத்தில் அதன் வடிவமைப்பைச் சகோதரர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
நாம் எப்படி வீணாக்காமல் இருக்கலாம்?
-
கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது...
-
நமக்காகப் பிரசுரங்களை வாங்கும்போது...
-
ஊழியத்துக்காகப் பிரசுரங்களை வாங்கும்போது... (mwb17.02 “பைபிள் பிரசுரங்களை ஞானமாக பயன்படுத்துங்கள்” பாரா 1)
-
ஊழியத்தில் பிரசுரங்களைக் கொடுக்கும்போது... (mwb17.02 “பைபிள் பிரசுரங்களை ஞானமாக பயன்படுத்துங்கள்” பாரா 2, பெட்டி)