Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

கிறிஸ்துவைப் போலவே மனத்தாழ்மையையும் அடக்கத்தையும் காட்டுங்கள்

கிறிஸ்துவைப் போலவே மனத்தாழ்மையையும் அடக்கத்தையும் காட்டுங்கள்

இதுவரை வாழ்ந்தவர்களிலேயே இயேசு மிகப்பெரிய மனிதராக இருந்தபோதிலும், யெகோவாவை மகிமைப்படுத்தியதன் மூலம் அடக்கத்தையும் மனத்தாழ்மையையும் காட்டினார். (யோவா 7:16-18) ஆனால் சாத்தானோ, பிசாசாக மாறினான்; பிசாசு என்றால், “அவதூறு பேசுகிறவன்” என்று அர்த்தம். (யோவா 8:44) அவனுடைய குணத்தைத்தான் பரிசேயர்கள் காட்டினார்கள்; அவர்களுக்கு அவ்வளவு பெருமை இருந்ததால், மேசியாவின்மேல் விசுவாசம் வைத்தவர்களைத் தரக்குறைவானவர்களாக நினைத்தார்கள். (யோவா 7:45-49) சபையில் நமக்குச் சில பொறுப்புகள் கிடைக்கும்போது, நாம் எப்படி இயேசுவைப் போல் நடந்துகொள்ளலாம்?

“ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டுங்கள்”—பொறாமைப்படுவதையும் பெருமையடிப்பதையும் விட்டுவிடுங்கள், பகுதி 1 என்ற வீடியோவைப் பாருங்கள். பிறகு, இந்தக் கேள்வியைக் கலந்துபேசுங்கள்:

  • அலெக்ஸ் எப்படிப் பெருமையடித்தார்?

“ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டுங்கள்”—பொறாமைப்படுவதையும் பெருமையடிப்பதையும் விட்டுவிடுங்கள், பகுதி 2 என்ற வீடியோவைப் பாருங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கலந்துபேசுங்கள்:

  • அலெக்ஸ் எப்படி மனத்தாழ்மையோடு நடந்துகொண்டார்?

    கார்லையும் பில்லையும் அலெக்ஸ் எப்படி உற்சாகப்படுத்தினார்?

“ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டுங்கள்”—தலைக்கனத்தையும், கேவலமாக நடந்துகொள்வதையும் விட்டுவிடுங்கள், பகுதி 1 என்ற வீடியோவைப் பாருங்கள். பிறகு, இந்தக் கேள்வியைக் கலந்துபேசுங்கள்:

  • சகோதரர் ஹாரிஸ் எப்படி அடக்கத்தைக் காட்டத் தவறினார்?

“ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டுங்கள்”—தலைக்கனத்தையும், கேவலமாக நடந்துகொள்வதையும் விட்டுவிடுங்கள், பகுதி 2 என்ற வீடியோவைப் பாருங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கலந்துபேசுங்கள்:

  • சகோதரர் ஹாரிஸ் எப்படி அடக்கத்தோடு நடந்துகொண்டார்?

    சகோதரர் ஹாரிஸின் முன்மாதிரி டெய்ஸிக்கு என்ன பாடத்தைக் கற்றுக்கொடுத்தது?