தன்னுடைய தகப்பனை இயேசு மகிமைப்படுத்தினார்
தன்னுடைய சொல்லாலும் செயலாலும் தன் பரலோகத் தகப்பனை இயேசு மகிமைப்படுத்தினார். தன்னுடைய செய்தி கடவுளிடமிருந்துதான் வந்திருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்று அவர் ஆசைப்பட்டார். அதனால், வசனங்களை அடிப்படையாக வைத்து போதித்தார்; அடிக்கடி வசனங்களை மேற்கோள் காட்டினார். மற்றவர்கள் அவரைப் புகழ்ந்தபோது, அந்தப் புகழ்ச்சியை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை; யெகோவாவுக்குத்தான் புகழ் சேர்த்தார். யெகோவா கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுதான் அவருடைய முக்கிய குறிக்கோளாக இருந்தது.—யோவா 17:4.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் நாம் எப்படி இயேசுவைப் போல நடந்துகொள்ளலாம்?
-
பைபிள் படிப்பு நடத்தும்போது அல்லது மேடையிலிருந்து போதிக்கும்போது...
-
மற்றவர்கள் நம்மைப் புகழும்போது...
-
நேரத்தை எப்படிச் செலவு செய்வதென்று தீர்மானிக்கும்போது...