Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

உங்கள் மண வாழ்க்கையைப் பாதுகாத்திடுங்கள்

உங்கள் மண வாழ்க்கையைப் பாதுகாத்திடுங்கள்

திருமண உறுதிமொழிகளை யெகோவா ரொம்பவே முக்கியமானதாக நினைக்கிறார். அதனால்தான், கணவனும் மனைவியும் சேர்ந்திருக்க வேண்டுமென்று அவர் சொன்னார். (மத் 19:5, 6) கடவுளுடைய மக்களில் நிறைய பேர் சந்தோஷமான மண வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். அதற்காக, மண வாழ்க்கையில் பிரச்சினைகளே வராது என்று சொல்ல முடியாது. பிரச்சினைகள் வரும்போது பிரிந்துபோவது அல்லது விவாகரத்து செய்வதுதான் நல்லது என்ற பொதுவான கருத்து மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால், கிறிஸ்தவர்களான நமக்குள் அப்படிப்பட்ட கருத்து இருக்கக் கூடாது. கல்யாணமான கிறிஸ்தவர்கள் தங்களுடைய மண வாழ்க்கையை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?

ஐந்து முக்கியமான வழிகளைக் கவனியுங்கள்:

  1. ஒழுக்கக்கேடான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது, தன்னுடைய துணை அல்லாத ஒருவரிடம் காதலிப்பதுபோல் நடந்துகொள்வது போன்றவற்றைத் தவிர்ப்பதன் மூலம் உங்கள் இதயத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். அவை, உங்கள் திருமண பந்தத்தை பலவீனமாக்கிவிடும்.—மத் 5:28; 2பே 2:14.

  2. கடவுளோடு நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களுடைய கல்யாண வாழ்க்கை அவருக்குப் பிரியமான விதத்தில் இருப்பதற்காகக் கடினமாக உழையுங்கள்.—சங் 97:10.

  3. கடவுள் விரும்புகிறபடி உங்களுடைய சுபாவத்தைப் புதுப்பித்துக்கொண்டே இருங்கள். உங்கள் துணையின் மனதைக் குளிர்விக்கும் விதத்தில் ஏதாவது சின்ன சின்ன விஷயங்களைச் செய்யுங்கள்.—கொலோ 3:8-10, 12-14.

  4. மதிப்பு மரியாதையோடும் பலன்தரும் விதத்திலும் பேசுங்கள்.—கொலோ 4:6.

  5. தாம்பத்தியக் கடனைச் செலுத்தும் விஷயத்தில் அன்பையும் பாசத்தையும் காட்டுங்கள்.—1கொ 7:3, 4; 10:24.

கிறிஸ்தவர்கள் தங்களுடைய மண வாழ்க்கைக்கு மதிப்புக்கொடுக்கும்போது, திருமணத்தை ஆரம்பித்து வைத்த யெகோவாவுக்கு மதிப்புக் கொடுக்கிறார்கள்.

“சகிப்புத்தன்மையோடு ஓடுவோமாக”—போட்டியின் விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியுங்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக ஆரம்பித்தாலும், என்னென்ன சவால்கள் வரலாம்?

  • அன்பே காட்டாத ஒருவரோடு வாழ்க்கை நடத்துவதாக உணருகிறவர்களுக்கு பைபிள் நியமங்கள் எப்படி உதவும்?

  • மண வாழ்க்கை மணக்க பைபிள் நியமங்களைக் கடைப்பிடியுங்கள்

    திருமணம் சம்பந்தமாக என்னென்ன விதிமுறைகளை யெகோவா கொடுத்திருக்கிறார்?

  • கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க கணவனும் மனைவியும் என்ன செய்ய வேண்டும்?