Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

அன்பு காட்ட வாய்ப்பளிக்கும் வருடாந்தர மாநாடுகள்

அன்பு காட்ட வாய்ப்பளிக்கும் வருடாந்தர மாநாடுகள்

மாநாடுகள் என்றாலே நமக்குக் குஷிதான். ஏன் அப்படி? பூர்வ கால இஸ்ரவேலில் நடந்த மாநாடுகளைப் போலவே, நம் காலத்தில் நடக்கிற மாநாடுகளிலும் நூற்றுக்கணக்கான, சிலசமயங்களில் ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகளோடு ஒன்றுசேர்ந்து யெகோவாவை வணங்க நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஏராளமான ஆன்மீக உணவை அள்ளித்தரும் அந்த விருந்தில் கலந்துகொள்வது நமக்கு அதிக சந்தோஷத்தைத் தருகிறது. அதனால், மாநாட்டின் மூன்று நாட்களிலும் கலந்துகொள்ள நாம் ஆசைப்படுகிறோம்.

அப்படி ஒன்றுகூடி வருவதற்கான வாய்ப்பு கிடைக்கும்போது, அதிலிருந்து தனிப்பட்ட விதமாக நாம் எப்படிப் பயனடையலாம் என்று மட்டும் யோசிக்காமல், மற்றவர்களிடம் எப்படி அன்பு காட்டலாம் என்றும் யோசித்துப் பார்க்க வேண்டும். (கலா 6:10; எபி 10:24, 25) நம்முடைய சகோதர சகோதரிகளுக்காக கதவைத் திறந்துவிடும்போது அல்லது நமக்குத் தேவையான இருக்கைகளை மட்டும் பிடித்துவைக்கும்போது மற்றவர்களுடைய நலனிலும் நமக்கு அக்கறை இருக்கிறது என்பதைக் காட்டுகிறோம். (பிலி 2:3, 4) மாநாடுகளில் புதுப் புது நண்பர்களை நம்மால் கண்டுபிடிக்க முடியும். நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும், மதிய இடைவேளையிலும் நமக்குத் தெரியாதவர்களிடம் பேசிப் பழகலாம். (2கொ 6:13) இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் இணைபிரியாத நிறைய நண்பர்களை நம்மால் உருவாக்கிக்கொள்ள முடியும். அதைவிட முக்கியமாக, நாம் காட்டுகிற உண்மையான அன்பைப் பார்க்கிற மற்ற ஆட்களும், நம்மோடு சேர்ந்து யெகோவாவை வணங்க தீர்மானம் எடுப்பார்கள்.—யோவா 13:35.

“அன்பு ஒருபோதும் ஒழியாது”! சர்வதேச மாநாடுகள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • 2019-ல் நடந்த சர்வதேச மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக பல நாடுகளிலிருந்து வந்திருந்தவர்களுக்கு எப்படி அன்பு காட்டப்பட்டது?

  • யெகோவாவின் மக்கள் மத்தியில் இருக்கிற ஒற்றுமையும் அன்பும் அற்புதமானது என்று ஏன் சொல்லலாம்?

  • கிறிஸ்தவ அன்பைப் பற்றி ஆளும் குழு அங்கத்தினர்கள் எப்படியெல்லாம் விளக்கினார்கள்?

  • மாநாடுகளில் ஒருவருக்கொருவர் அதிகமதிகமாக அன்பு காட்ட உங்கள் பங்கில் என்ன செய்யலாம்?

    ஜெர்மனியிலும் தென் கொரியாவிலும் கிறிஸ்தவ அன்பு சகோதரர்களை எப்படி ஒன்றுபடுத்தியது?

  • நாம் என்ன செய்ய தீர்மானமாக இருக்கலாம்?