கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
கடவுளும் கிறிஸ்துவும் தரும் எதிர்கால விடுதலை
வாழ்க்கையே ஒரு போராட்டம்தான். நீங்கள் ஒரு குடும்பத் தலைவராக இருந்தால், உங்களுக்கு ஏகப்பட்ட பொறுப்புகள் இருக்கும். ஒரு ஒற்றைப் பெற்றோராக இருந்தால், குடும்பத்தைக் கவனிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் பள்ளியில் படிப்பவராக இருந்தால், வம்பு செய்கிற பிள்ளைகளின் தொல்லைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். அல்லது நீங்கள் மோசமான உடல்நலப் பிரச்சினையோடோ வயதாகிக்கொண்டே போவதால் வரும் பிரச்சினையோடோ போராடிக்கொண்டிருக்கலாம். இப்படி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கிறது. கிறிஸ்தவர்கள் நிறைய பேர் ஒரே சமயத்தில் பல பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும், இப்படிப்பட்ட பிரச்சினைகளிலிருந்து நாம் சீக்கிரத்தில் விடுபடுவோம் என்று நமக்குத் தெரியும்.—2கொ 4:16-18.
இப்போது நாம் படுகிற கஷ்டங்களை யெகோவா புரிந்துகொள்கிறார். கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு அவருக்கு உண்மையாக இருப்பதைப் பார்க்கும்போது அவர் சந்தோஷப்படுகிறார். அதோடு, எதிர்காலத்தில் நம்மை அளவில்லாமல் ஆசீர்வதிக்கப் போகிறார். (எரே 29:11, 12) இது நமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! நம் ஒவ்வொருவர்மேல் இயேசுவுக்கும் அக்கறை இருக்கிறது. கிறிஸ்தவர்களாக நமக்கிருக்கும் கடமைகளைச் செய்யும்போது, ‘அவர் நம் கூடவே இருப்பார்.’ (மத் 28:20) கடவுளுடைய அரசாங்கத்தில் கிடைக்கப்போகும் விடுதலையைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது, நம்முடைய நம்பிக்கையும் இப்போது படுகிற கஷ்டங்களைச் சகித்துக்கொள்ள வேண்டுமென்ற தீர்மானமும் பலமாகும்.—ரோ 8:19-21.
புயல் போன்ற பிரச்சினைகள் வரும்போது, இயேசுவின்மீதே உங்கள் கவனத்தை செலுத்துங்கள்—எதிர்கால ஆசீர்வாதங்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
கடவுளிடமிருந்து மனிதர்கள் எப்படி விலகினார்கள், அதனால் என்ன ஆனது?
-
யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறவர்களுக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் கிடைக்கப்போகிறது?
-
இந்த அருமையான எதிர்காலம் எப்படிக் கிடைக்கப்போகிறது?
-
புதிய உலகத்தில் என்னென்ன ஆசீர்வாதங்களைப் பெற நீங்கள் ஆசையோடு காத்திருக்கிறீர்கள்?