Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்கள் விடுதலை வருஷத்தில் தங்கள் குடும்பத்துக்குத் திரும்பி வந்தார்கள்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

விடுதலை வருஷமும் எதிர்காலத்தில் கிடைக்கும் விடுதலையும்

விடுதலை வருஷமும் எதிர்காலத்தில் கிடைக்கும் விடுதலையும்

தீராத கடன் தொல்லையிலிருந்தும் வாழ்நாள் முழுக்க ஏழைகளாக இருப்பதிலிருந்தும் விடுபட விடுதலை வருஷம் இஸ்ரவேலர்களுக்கு உதவியது (லேவி 25:10; it-1-E பக். 871; அட்டைப் படம்)

நிலம் குத்தகையின் அடிப்படையில், அதாவது அடுத்த விடுதலை வருஷம் வரும்வரை அது எவ்வளவு விளைச்சல் தரும் என்பதைக் கணக்குப் போட்டுப் பார்த்து அதன் அடிப்படையில், விற்கப்பட்டது (லேவி 25:15; it-1-E பக். 1200 பாரா 2)

விடுதலை வருஷம் சம்பந்தமான சட்டத்துக்கு மக்கள் கீழ்ப்படிந்தபோது அவர்களை யெகோவா ஆசீர்வதித்தார் (லேவி 25:18-22; it-2-E பக். 122-123)

கடவுளுக்கு உண்மையாக இருக்கிற மக்கள், எதிர்காலத்தில் அடையாள அர்த்தமுள்ள இந்த விடுதலை வருஷத்தின் நன்மைகளை முழுமையாகப் பெற்றுக்கொள்வார்கள். அப்போது, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் அவர்கள் முழுமையாக விடுதலை பெறுவார்கள்.—ரோ 8:21.

யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிற விடுதலையைப் பெற்றுக்கொள்ள நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும்?