Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பெற்றோர்களே, முக்கியமான விஷயங்களைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்

பெற்றோர்களே, முக்கியமான விஷயங்களைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்

நாம் வாழ்கிற இந்த உலகம், நல்லதைக் கெட்டது என்றும், கெட்டதை நல்லது என்றும் நினைக்க வைக்கிறது. (ஏசா 5:20) சிலர், யெகோவா வெறுக்கிற விஷயங்களைச் செய்கிறார்கள். ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் முறைகேடாக நடந்துகொள்வதுகூட அதில் ஒன்று. கூடப் படிக்கிறவர்களோ மற்றவர்களோ கெட்ட விஷயங்களைச் செய்யும்படி நம்முடைய அருமையான பிள்ளைகளைச் சுண்டியிழுக்கலாம். இப்படிப்பட்ட ஆபத்திலிருந்து உங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?

யெகோவாவுடைய சட்டங்களைப் பற்றி பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். (லேவி 18:3) செக்ஸ் பற்றி பைபிள் சொல்வதைப் பிள்ளைகளுடைய வயதுக்கு ஏற்றபடி சொல்லிக்கொடுங்கள். (உபா 6:7) உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மத்தவங்க பாசம் காட்டுறதுக்கு, (உதாரணத்துக்கு, தொட்டு பேசுறதுக்கு, கட்டியணைக்கறதுக்கு, இல்லனா முத்தம் கொடுக்குறதுக்கு) எந்தளவுக்கு அனுமதிக்கலாம்... அடக்கமான டிரஸ் போடுறது ஏன் முக்கியம்... மத்தவங்க பாக்குற மாதிரி சில விஷயங்கள (உதாரணத்துக்கு குளிக்கிறது, துணி மாத்துறது) ஏன் செய்யக் கூடாது... இத பத்தியெல்லாம் என் பிள்ளைக்கு சொல்லிக்கொடுத்திருக்கேனா? யாராவது ஆபாசப் படங்கள காட்டுறப்போ, இல்லனா, யெகோவாவுக்கு பிடிக்காத ஒரு விஷயத்த செய்ய சொல்றப்போ என்ன செய்யணும்னு என் பிள்ளைக்கு தெரியுமா?’ பிள்ளைகளுக்கு முன்கூட்டியே இந்த விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தால் நிறைய பிரச்சினைகளை அவர்களால் தவிர்க்க முடியும். (நீதி 27:12; பிர 7:12) இப்படிச் செய்வதன் மூலம், யெகோவா கொடுத்த விலைமதிப்புள்ள சொத்தாகிய பிள்ளைகளிடம் நீங்கள் அன்பு காட்டுகிறீர்கள்.—சங் 127:3.

சகித்திருக்கும் ஒரு வீட்டைக் கட்டுங்கள்—‘தீமையிலிருந்து’ உங்கள் பிள்ளைகளைக் காத்திடுங்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • செக்ஸ் பற்றிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க பெற்றோர் சிலர் ஏன் தயங்குகிறார்கள்?

  • “யெகோவா சொல்கிற விதத்தில் . . . கண்டித்து, அவர் தருகிற புத்திமதியின்படி” பிள்ளைகளை ஏன் பயிற்றுவிக்க வேண்டும்?—எபே 6:4

  • கற்றுக்கொடுப்பது பாதுகாப்பு தரும்

    செக்ஸ் பற்றிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதற்கு யெகோவாவின் அமைப்பு பெற்றோருக்கு எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறது?—w19.05 பக். 12, பெட்டி

  • பிரச்சினைகள் வருவதற்கு முன்பே பிள்ளைகளோடு நல்ல பேச்சுத்தொடர்பு வைத்துக்கொள்வது ஏன் முக்கியம்?