Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஞானஸ்நானத்துக்கான பாதையில் எதுவரைக்கும் போயிருக்கிறீர்கள்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

யெகோவாவை வணங்க முடிவு செய்யுங்கள்

யெகோவாவை வணங்க முடிவு செய்யுங்கள்

நீங்கள் ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக அல்லது பைபிள் மாணவராக இருந்தால், ஞானஸ்நானம் எடுக்க இலக்கு வைத்திருக்கிறீர்களா? நீங்கள் ஏன் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்? யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிப்பதும் ஞானஸ்நானம் எடுப்பதும் அவரோடு ஒரு விசேஷ பந்தத்துக்குள் வர உங்களுக்கு உதவுகின்றன. (சங் 91:1) மீட்பு பெறுவதற்கான வழியாகவும் இருக்கின்றன. (1பே 3:21) இந்தப் படிகளை எடுக்கும் அளவுக்கு எப்படி முன்னேறலாம்?

நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் மனதில் ஏதாவது கேள்விகள் இருந்தால், நீங்களே ஆராய்ச்சி செய்து பதில்களைக் கண்டுபிடியுங்கள். (ரோ 12:2) என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதைப் பாருங்கள். யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தோடு அந்த மாற்றங்களைச் செய்யுங்கள். (நீதி 27:11; எபே 4:23, 24) உதவிக்காக எப்போதும் அவரிடம் ஜெபம் செய்யுங்கள். யெகோவா தன்னுடைய சக்தியால் உங்களைப் பலப்படுத்தி ஆதரிப்பார் என்பதில் உறுதியாக இருங்கள். (1பே 5:10, 11) நீங்கள் எடுக்கிற முயற்சி வீண்போகாது. யெகோவாவை வணங்கும்போது உங்களுக்கு மிகச் சிறந்த வாழ்க்கை கிடைக்கும்.—சங் 16:11.

ஞானஸ்நானம் எடுக்க சில டிப்ஸ் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • ஞானஸ்நானம் எடுக்க சிலர் என்னென்ன தடைகளைத் தாண்ட வேண்டியிருந்தது?

  • யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிக்கும் அளவுக்கு விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?

  • ஞானஸ்நானம் எடுப்பதற்குத் தகுதிபெற சிலரை எது தூண்டியிருக்கிறது?

  • யெகோவாவை வணங்க முடிவு செய்பவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?

  • அர்ப்பணிப்பதும் ஞானஸ்நானம் எடுப்பதும் எதைக் குறிக்கிறது?