கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் உங்களால் துணைப் பயனியராக சேவை செய்ய முடியுமா?
நினைவுநாள் சமயத்தில் அதிகமாக ஊழியம் செய்ய விரும்புகிறீர்களா? (2கொ 5:14, 15) மார்ச், ஏப்ரல் மாதங்களில் துணைப் பயனியர்கள் 30 அல்லது 50 மணிநேரம் ஊழியம் செய்யலாம். இந்த விசேஷ வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நீங்கள் விரும்பினால், சபை ஊழியக் குழுவிடம் அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து கொடுங்கள். ஒவ்வொரு மாதமும் துணைப் பயனியராக சேவை செய்கிறவர்களின் பெயர்கள் சபையில் அறிவிக்கப்படும். இப்படிச் செய்வதால், அந்தப் பயனியர்கள் தங்களுடைய ஊழிய மணிநேரத்தை எட்ட சபையிலுள்ள மற்றவர்களால் உதவ முடியும். நினைவுநாள் சமயத்தில், நம் திறமைகளைப் பட்டைதீட்டி ஊழியத்தில் அதிகமாக ஈடுபடுவதற்கும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவதற்கும் நமக்குக் கிடைக்கிற வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.—1தெ 5:11.