கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
எல்லாருக்கும் நல்ல செய்தி சொல்ல ஒழுங்கமைக்கப்படுவது
இஸ்ரவேலர்களை யெகோவா ஒழுங்கமைத்தது போல, இன்றும் அவருடைய விருப்பத்தைச் செய்வதற்கு தன்னுடைய மக்களை அவர் ஒழுங்கமைக்கிறார். நல்ல செய்தியை நிறைய பேருக்குச் சொல்வதற்காக, உலகம் முழுவதுமுள்ள கிளை அலுவலகங்கள், வட்டாரங்கள், சபைகள், வெளி ஊழியத் தொகுதிகள் என எல்லாமே ஒன்றுசேர்ந்து செயல்படுகின்றன. நாம் எல்லாரிடமும், வேறு மொழி பேசுகிறவர்களிடம்கூட, நல்ல செய்தியைச் சொல்கிறோம்.—வெளி 14:6, 7.
வேறொரு மொழி பேசுகிறவருக்கு பைபிளைப் பற்றிச் சொல்லிக்கொடுப்பதற்காக அந்த மொழியைக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறீர்களா? ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ள உங்களால் நேரம் செலவிட முடியாவிட்டாலும் அந்த மொழியில் சுருக்கமாக நல்ல செய்தியைச் சொல்வதற்கு JW லாங்குவேஜ் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி கற்றுக்கொள்ளலாம். பிறகு, ஊழியத்தில் அதைப் பயன்படுத்தும்போது முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்குக் கிடைத்த அதே சந்தோஷம் உங்களுக்கும் கிடைக்கும். “கடவுளுடைய மகத்தான செயல்களைப் பற்றி” தங்கள் சொந்த மொழிகளில் கேட்ட வேறு தேசத்து மக்கள் மிகவும் ஆச்சரியப்பட்டதைப் பார்த்து அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.—அப் 2:7-11.
யெகோவாவின் நண்பனாகு!—ஊழியத்துல வேற மொழி பேசுறவங்ககிட்ட எப்படி பேசுறது? என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
JW லாங்குவேஜ் அப்ளிகேஷனை எப்போது பயன்படுத்தலாம்?
-
அதிலுள்ள சில விசேஷ அம்சங்கள் என்ன?
-
நீங்கள் ஊழியம் செய்கிற பகுதியில் என்னென்ன மொழி பேசுகிற ஆட்கள் இருக்கிறார்கள்?
-
நீங்கள் பேசுவதை ஆர்வமாக கேட்பவர் வேறு மொழி பேசுபவராக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?—od பக். 101-102 பாரா. 39-41