Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

யெகோவாவின் ஞானத்தை முழுமையாக நம்புவதற்கு உதவும் படைப்புகள்

யெகோவாவின் ஞானத்தை முழுமையாக நம்புவதற்கு உதவும் படைப்புகள்

நமக்கு எது நல்லது என்பது யெகோவாவுக்கு நன்றாகவே தெரியும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இதை உறுதியாக நம்பி அவருடைய ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படியும்போது நாம் ஞானமாக நடந்துகொள்கிறோம். (நீதி 16:3, 9) ஆனால், யெகோவா கொடுக்கிற ஞானமான ஆலோசனை சிலசமயங்களில் நாம் யோசிப்பதுபோல் இருக்காது. அப்போது, அவற்றை நம்புவது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். யெகோவாவுடைய படைப்புகளை ஆழமாக யோசித்துப் பார்ப்பது அவருடைய ஞானத்தை முழுமையாக நம்புவதற்கு நமக்கு உதவும்.—நீதி 30:24, 25; ரோ 1:20.

யாருடைய கைவண்ணம்? போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணிக்கும் எறும்புகள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • எறும்புகள் தினமும் என்ன செய்கின்றன?

  • கூட்டமாகப் போகும்போது நெரிசல் ஏற்படாதபடி எறும்புகள் எப்படிப் பார்த்துக்கொள்கின்றன?

  • எறும்புகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு போகும் விதத்திலிருந்து மனிதர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

யாருடைய கைவண்ணம்? பம்பிள் தேனீயின் பறக்கும் திறன் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • சின்ன விமானத்தை ஓட்டுவதில் என்ன சவால்கள் இருக்கின்றன?

  • பலமான காற்று அடித்தாலும் பம்பிள் தேனீ எப்படித் தடுமாறாமல் பறக்கிறது?

  • இயல்பாகவே பம்பிள் தேனீக்கு இருக்கிற ஞானம், எதிர்காலத்தில் மனிதர்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கலாம்?

யெகோவாவுடைய ஞானம் பளிச்சென்று தெரிகிற என்னென்ன படைப்புகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?