ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள் | ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க. . .
கூட்டங்களுக்கு வர பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள்
யெகோவாவை வணங்குவதில் நிறைய விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றுதான் கூட்டங்களில் கலந்துகொள்வது. (சங் 22:22) கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது நாம் ரொம்ப சந்தோஷப்படுகிறோம். நிறைய ஆசீர்வாதங்களையும் அனுபவிக்கிறோம். (சங் 65:4) தொடர்ந்து கூட்டங்களில் கலந்துகொள்கிற பைபிள் மாணவர்கள் வேகமாக முன்னேற்றம் செய்வார்கள்.
கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு பைபிள் மாணவர்களுக்கு எப்படி உதவலாம்? கூட்டங்களுக்கு வரச்சொல்லி அடிக்கடி அவர்களைக் கூப்பிடுங்கள். ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவை அவர்களுக்குக் காட்டுங்கள். கூட்டங்களில் கலந்துகொள்வதால் கிடைக்கும் நன்மைகளை விளக்கிச் சொல்லுங்கள். (lff பாடம் 10) ஒருவேளை, கூட்டங்களில் நீங்கள் கற்றுக்கொண்ட ஒரு விஷயத்தை அவர்களிடம் சொல்லலாம், அல்லது அடுத்த கூட்டத்தில் எதைப் பற்றி பேசுவார்கள் என்பதைச் சுருக்கமாகச் சொல்லலாம். கூட்டத்தில் படிக்கப்போகும் பிரசுரங்களை அவர்களிடம் கொடுக்கலாம். கூட்டங்களுக்கு வர அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால், அதையும் செய்யலாம். ஒருவேளை அவர்களைப் போய் கூட்டிக்கொண்டு வரலாம். முதல் தடவையாக உங்களுடைய பைபிள் மாணவர் கூட்டத்துக்கு வரும்போது, நீங்கள் எடுத்த முயற்சி எதுவும் வீண்போகவில்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.—1கொ 14:24, 25.
உங்கள் பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள். . . கூட்டங்களுக்கு வர என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
ஜேடை கூட்டத்துக்கு கூப்பிட எந்தச் சந்தர்ப்பத்தை நீட்டா பயன்படுத்தினாள்?
-
பைபிள் மாணவர் ஒருவர் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது நாம் ஏன் சந்தோஷப்படுகிறோம்?
-
முதல் தடவை கூட்டத்தில் கலந்துகொண்டபோது ஜேடுக்கு எப்படி இருந்தது?