ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள் | ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க. . .
கெட்ட சகவாசத்தைத் தவிர்க்க பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள்
உங்களுடைய பைபிள் மாணவர்கள் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்தால் யெகோவாவிடம் அவர்களால் நல்ல நட்பை வைத்துக்கொள்ள முடியும். (சங் 15:1, 4) நல்ல நண்பர்கள் சரியானதைச் செய்ய அவர்களுக்கு உதவுவார்கள்.—நீதி 13:20; lff பாடம் 48.
பைபிள் சொல்கிறபடி நடக்காத நண்பர்களை விட்டுவிலகுவது உங்கள் பைபிள் மாணவர்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். இந்த விஷயத்தில் அவர்களுக்கு உதவும்போது அவர்களைப் புரிந்து நடந்துகொள்ளுங்கள். பைபிள் படிப்பு எடுக்காத சமயங்களில்கூட அவர்கள்மேல் அக்கறை காட்டுங்கள். அதற்கு என்ன செய்யலாம்? அவர்களுக்கு மெசேஜ் அனுப்பலாம், ஃபோன் செய்யலாம் அல்லது அவர்களை வீட்டில் போய்ப் பார்க்கலாம். அவர்கள் முன்னேற்றம் செய்யும்போது இன்னொன்றையும் செய்யலாம். சகோதர சகோதரிகளோடு சேர்ந்து சந்தோஷமாக நாம் நேரம் செலவிடும்போது அவர்களையும் கூப்பிடலாம். அப்படிச் செய்யும்போது, இழந்த நண்பர்களைவிட நிறைய நண்பர்கள் கிடைத்திருப்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். (மாற் 10:29, 30) பைபிள் மாணவர்கள் யெகோவாவுடைய குடும்பத்தில் ஒருவராக ஆகும்போது நீங்களும் ரொம்ப சந்தோஷப்படுவீர்கள்.
உங்கள் பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள் . . . கெட்ட சகவாசத்தைத் தவிர்க்க என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
எது கெட்ட சகவாசம்? (1கொ 15:33)
-
கிறிஸ்தவர்கள் ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவிடுவதைப் பற்றி ஜேட் எப்படிக் கற்பனை செய்து பார்த்தாள்?
-
கெட்ட நண்பர்களை விட்டுவிலக ஜேடுக்கு நீட்டா எப்படி உதவி செய்தாள்?