கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பிள்ளைகளே! அப்பா அம்மாவிடம் மனம் திறந்து பேசுங்கள்
உங்கள் மனதில் இருப்பதையெல்லாம் அப்பா அம்மாவிடம் ஏன் சொல்ல வேண்டும்? (நீதி 23:26) ஏனென்றால், உங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பையும் ஆலோசனை கொடுக்க வேண்டிய பொறுப்பையும் அவர்களுக்குத்தான் யெகோவா கொடுத்திருக்கிறார். (சங் 127:3, 4) உங்கள் கவலைகளை மனதிலே பூட்டி வைத்துக்கொண்டால், அப்பா அம்மாவால் உங்களுக்கு உதவி செய்ய முடியாமல் போய்விடும். அதுமட்டுமல்ல, அவர்களுடைய வாழ்க்கை அனுபவத்திலிருந்தும் உங்களால் எதுவும் கற்றுக்கொள்ள முடியாமல் போய்விடும். அப்படியென்றால், சில விஷயங்களை உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வது தவறா? இல்லை! உங்கள் அப்பா அம்மாவை ஏமாற்றாதவரைக்கும் அது ஒரு பெரிய பிரச்சினை இல்லை.—நீதி 3:32.
அப்பா அம்மாவிடம் பேசுவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? உங்களுக்கும் அவர்களுக்கும் ஒத்துவருகிற ஒரு நேரத்தில் பேசுங்கள். அது கஷ்டமாக இருக்கிறதா? கவலைப்படாதீர்கள்! உங்கள் மனதுக்குள் என்ன நினைக்கிறீர்களோ அதை ஒரு கடிதத்தில் எழுதி அவர்களிடம் கொடுங்கள். உங்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை அவர்கள் பேச விரும்பினால் என்ன செய்வது? உங்களுக்கு உதவ அவர்கள் ஆசைப்படுகிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் அப்பா அம்மாவை எதிரிகள்போல் பார்க்காதீர்கள், நண்பர்களாகப் பாருங்கள். உங்கள் அப்பா அம்மாவிடம் மனம் திறந்து பேசுவதற்கு முயற்சி எடுத்தால், இப்போது மட்டுமல்ல என்றென்றும் சந்தோஷமாக இருப்பீர்கள்.—நீதி 4:10-12.
டீனேஜில் நான்—அப்பா அம்மாவிடம் எப்படிப் பேசுவது? என்ற வீடியோவைக் காட்டிவிட்டு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:
-
எஸ்தரும் பர்திக்கும் தங்களைப் பற்றி என்ன புரிந்துகொண்டார்கள்?
-
இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?
-
உங்கள்மேல் அக்கறை இருப்பதை உங்கள் அப்பா அம்மா எப்படிக் காட்டியிருக்கிறார்கள்?
-
அப்பா அம்மாவிடம் பேசுவதற்கு எந்தெந்த பைபிள் ஆலோசனைகள் உங்களுக்கு உதவும்?