கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சோதனைகளைத் தாங்கிக்கொள்ள யெகோவா நமக்கு உதவுகிறார்
இந்தக் கடைசி நாட்களில், நமக்குச் சோதனைக்குமேல் சோதனை வருகிறது. சிலசமயம், தாங்கிக்கொள்ளவே முடியாத அளவுக்குப் பயங்கரமான சோதனை நமக்கு வந்திருப்பதாக நாம் நினைக்கலாம். ஆனால், நாம் யெகோவாவைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டால், எப்பேர்ப்பட்ட கஷ்டத்தையும் சகித்துக்கொள்ள அவர் நமக்கு உதவி செய்வார். (ஏசா 43:2, 4) சோதனைகள் வரும்போது நாம் எப்படி யெகோவாவைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளலாம்?
ஜெபம். நம் மனதில் இருப்பதையெல்லாம் யெகோவாவிடம் கொட்டும்போது அவர் நமக்கு மன சமாதானத்தைக் கொடுப்பார். சகித்திருப்பதற்குத் தேவையான மன பலத்தையும் தருவார்.—பிலி 4:6, 7; 1தெ 5:17.
கூட்டங்கள். கூட்டங்களின் மூலம் ஆன்மீக உணவையும் சகோதர சகோதரிகளின் நட்பையும் யெகோவா நமக்குத் தருகிறார். எப்போதையும்விட இப்போது அவை நமக்கு ரொம்பத் தேவை. (எபி 10:24, 25) கூட்டங்களுக்காகத் தயாரிக்கும்போதும், அங்கே போய் பதில்கள் சொல்லும்போதும் யெகோவாவின் சக்தி தரும் உதவி நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.—வெளி 2:29.
ஊழியம். மும்முரமாக ஊழியம் செய்ய நாம் முழு முயற்சி எடுத்தால், நம்பிக்கையான விஷயங்கள்தான் எப்போதும் நம் மனதில் நிறைந்திருக்கும். அதுமட்டுமல்ல, யெகோவாவோடும் நம்மோடு ஊழியம் செய்யும் சகோதர சகோதரிகளோடும் நமக்கு இருக்கும் நட்பு பலமாகும்.—1கொ 3:5-10.
யெகோவா உங்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்வார் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
சோதனைகளின்போது யெகோவாவைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள மலூவுக்கு எது உதவியது?
-
சங்கீதம் 34:18-ல் இருக்கும் வார்த்தைகள், சோதனைகளின்போது மலூவுக்கு ஆறுதல் தந்ததுபோல் நமக்கும் எப்படி ஆறுதல் தரும்?
-
சோதனைகளின்போது யெகோவா நமக்கு ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ தருவார் என்பதை மலூவின் அனுபவம் எப்படிக் காட்டுகிறது?—2கொ 4:7