பைபிளில் இருக்கும் புதையல்கள்
அவசர உணர்வோடு இருங்கள்
யூதா மக்கள் தொடர்ந்து மோசமாக நடந்துகொண்டே இருந்தால் அவர்களை ஒதுக்கித்தள்ளிவிடுவதாக யெகோவா பல வருஷங்கள் எச்சரித்தார் (2ரா 24:2, 3; w01 2/15 பக். 12 பாரா 2)
கி.மு. 607-ல் எருசலேமை அழிப்பதற்காக பாபிலோனியர்களை யெகோவா பயன்படுத்தினார் (2ரா 25:8-10; w07 3/15 பக். 11 பாரா 10)
எச்சரிக்கையைக் கேட்டு நடந்தவர்களுடைய உயிரை யெகோவா காப்பாற்றினார் (2ரா 25:11)
“கடவுள்பக்தி இல்லாத” மக்களைச் சீக்கிரத்தில் நியாயந்தீர்க்கப்போவதாக யெகோவா பல வருஷங்களாக எச்சரித்துக்கொண்டிருக்கிறார்.—2பே 3:7.
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கடவுள் கொடுக்குற எச்சரிக்கைய பத்தி மத்தவங்களுக்கு சொல்ல, எல்லா வாய்ப்பையும் நான் பயன்படுத்திக்கிறேனா?’—2தீ 4:2.