Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

யெகோவாவைப் போல யோசிக்க கற்றுக்கொள்ளுங்கள்

யெகோவாவைப் போல யோசிக்க கற்றுக்கொள்ளுங்கள்

யெகோவாவின் மனதைச் சந்தோஷப்படுத்தும் விதமாக நடந்துகொள்ளத்தான் நாம் எப்போதுமே ஆசைப்படுகிறோம். (நீதி 27:11) அதனால், நேரடியான சட்டங்களோ கட்டளைகளோ இல்லாத சமயத்தில்கூட அவரை மாதிரியே யோசித்து நாம் முடிவெடுக்க வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

பைபிளைப் படிப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு தடவை பைபிளைப் படிக்கும்போதும் நாம் யெகோவாவோடு நேரம் செலவு செய்கிறோம். தன்னுடைய மக்களிடம் யெகோவா எப்படி நடந்துகொண்டார் என்று பைபிளில் இருக்கிறது. அவருடைய பார்வையில் நல்லவர்களாக வாழ்ந்தவர்களைப் பற்றியும் வாழாதவர்களைப் பற்றியும்கூட அதில் இருக்கிறது. இதையெல்லாம் படிக்கும்போது யெகோவா யோசிக்கும் விதத்தை நாம் புரிந்துகொள்வோம். முடிவுகளை எடுக்க வேண்டிய சமயத்தில், நாம் கற்றுக்கொண்ட பாடங்களையும் நியமங்களையும் கடவுளுடைய சக்தி நமக்கு ஞாபகப்படுத்தும்.—யோவா 14:26.

ஆராய்ச்சி செய்யுங்கள். ஏதாவது முடிவெடுக்க வேண்டிய சமயத்தில், ‘இத பத்தி யெகோவா என்ன யோசிக்குறாருனு தெரிஞ்சுக்க எந்த வசனம் இல்லனா பைபிள் பதிவு எனக்கு உதவி செய்யும்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். உதவி கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். அமைப்பு கொடுத்திருக்கும் ஆராய்ச்சிக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ற பைபிள் நியமங்களைக் கண்டுபிடியுங்கள், அதன்படி செய்யுங்கள்.—சங் 25:4.

“சகிப்புத்தன்மையோடு ஓடுவோமாக”—சத்தான உணவை சாப்பிடுங்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • வீடியோவில் வந்த அந்தச் சகோதரிக்கு என்னென்ன பிரச்சினைகள் இருந்தன?

  • இந்த மாதிரி பிரச்சினைகளைச் சமாளிக்க ஆராய்ச்சி கருவிகளை எப்படிப் பயன்படுத்தலாம்?

  • நல்ல முடிவை எடுப்பதற்காக ஆராய்ச்சி செய்யும்போதும் தனிப்பட்ட படிப்பைப் படிக்கும்போதும் நாம் எப்படி நன்மையடைவோம்?—எபி 5:13, 14