Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிப்ரவரி 19-25

சங்கீதம் 8-10

பிப்ரவரி 19-25

பாட்டு 2; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. ‘யெகோவாவே, உங்களை புகழ்வேன்’!

(10 நிமி.)

நிறைய நல்ல விஷயங்களை யெகோவா நமக்காக கொடுத்திருக்கிறார் (சங். 8:3-6; w21.08 பக். 3 பாரா 6)

யெகோவாவுடைய அற்புதமான படைப்புகளைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லும் போதெல்லாம் அவரை நாம் சந்தோஷமாக புகழ்கிறோம் (சங். 9:1; w20.05 பக். 23 பாரா 10)

மனதிலிருந்து பாடும்போதும், அவரை நாம் புகழ்கிறோம் (சங். 9:2; w22.04 பக். 7 பாரா 13)

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இன்னும் வேறெந்த விதங்களில் நான் யெகோவாவைப் புகழ முடியும்?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங். 8:3—கடவுளுடைய கைகள் (அல்லது விரல்கள், அடிக்குறிப்பு) என்று சங்கீதக்காரன் சொன்னதன் அர்த்தம் என்ன? (cl அதி. 4 பக். 40 பாரா 8)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். கடவுள்மேல் நம்பிக்கை இல்லை என்று வீட்டுக்காரர் சொல்கிறார். (lmd பாடம் 5 குறிப்பு 4)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. போன தடவை நீங்கள் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தபோது, ஒருவர் தனக்கு கடவுள்மேல் நம்பிக்கை இல்லை என்று சொல்லியிருந்தார். ஆனால், படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள இப்போது அவர் தயாராக இருக்கிறார். (th படிப்பு 7)

6. பேச்சு

(5 நிமி.) w21.06 பக். 6-7 பாரா.15-18—பொருள்: யெகோவாவைப் புகழ உங்கள் பைபிள் மாணவருக்கு உதவுங்கள். (th படிப்பு 10)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 10

7. இயல்பாக எப்படி சந்தர்ப்ப சாட்சி கொடுப்பது?

(10 நிமி.) கலந்துபேசுங்கள்.

யெகோவாவை புகழ்ந்துகொண்டே இருக்க நாம் எல்லாரும் ஆசைப்படுகிறோம். அதற்கு ஒரு வழி, தினமும் நாம் சந்திக்கிற ஆட்களிடம் அவரைப் பற்றி சாட்சி கொடுப்பதுதான். (சங். 35:28) ஆரம்பத்தில் சந்தர்ப்ப சாட்சி கொடுக்க ஒருவேளை நமக்கு தயக்கமாக இருக்கலாம். ஆனால், இயல்பாக பேச்சை ஆரம்பிக்கவும் அதைத் தொடரவும் நாம் கற்றுக்கொண்டால், நாம் அதில் திறமைசாலியாக ஆகிவிடுவோம், அதை சந்தோஷமாகவும் செய்வோம்!

“சமாதானத்தின் நல்ல செய்தியை” சொல்ல தயாராக இருங்கள்—நீங்களே பேச ஆரம்பியுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பின்பு இந்தக் கேள்வியைக் கேளுங்கள்:

சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதில் திறமைசாலி ஆவதற்கு இந்த வீடியோவில் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

பேச்சை ஆரம்பிக்க உங்களுக்கு உதவுகிற சில டிப்ஸ்:

  •   வெளியே போகும்போதெல்லாம் மற்றவர்களிடம் பேச சந்தர்ப்பம் கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டே இருங்கள். அதற்காக ஜெபம் செய்யுங்கள், நல்மனமுள்ள ஆட்களைக் கண்டுபிடிக்க உதவச் சொல்லி யெகோவாவிடம் கேளுங்கள்

  •   நீங்கள் சந்திக்கிற மக்களிடம் நட்பாக பழகுங்கள், தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள். அந்த நபரைப் பற்றித் தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அப்போதுதான் எந்த பைபிள் சத்தியத்தைப் பற்றி பேசினால் அவர் மனதைத் தொட முடியும் என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியும்

  •   முடிந்தால், உங்களைத் தொடர்புகொள்வதற்கான தகவல்களை அவர்களிடம் கொடுங்கள், அதேபோல் அவரிடம் இருந்தும் அதைக் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்

  •   நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் நபரோடு கடைசிவரைக்கும் சாட்சி கொடுக்க முடியாமல் போனாலும்கூட, அதை நினைத்து சோர்ந்துபோகாதீர்கள்

  •   அந்த நபரிடம் பேசி முடித்த பிறகும் அவரைப் பற்றி யோசியுங்கள். ஒரு பைபிள் வசனத்தையோ அல்லது jw.org-ல் வந்த ஒரு கட்டுரைக்கான லிங்கையோ அவருக்கு அனுப்புங்கள். இப்படி அவர்மேல் தனிப்பட்ட அக்கறையை தொடர்ந்து காட்டுங்கள்

இதை செய்து பாருங்கள்: உங்களிடம் யாராவது, ‘சனி ஞாயிறு என்ன செய்தீர்கள்?’ என்று கேட்டால், கூட்டங்களில் இருந்து கற்றுக்கொண்ட ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி சொல்லுங்கள் அல்லது, மற்றவர்களுக்கு பைபிளை இலவசமாக சொல்லிக்கொடுக்கிற உங்கள் வேலையைப் பற்றி சொல்லுங்கள்.

8. சபைத் தேவைகள்

(5 நிமி.)

9. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 65; ஜெபம்