Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜனவரி 20-26

சங்கீதம் 138–139

ஜனவரி 20-26

பாட்டு 93; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. பயத்தில் பின்வாங்காதீர்கள்

(10 நிமி.)

முழு இதயத்தோடு யெகோவாவைப் புகழ ஆசைப்படுகிறோம் (சங் 138:1)

கூட்டத்தில் பதில் சொல்ல உங்களுக்குப் பயமாக இருந்தால், யெகோவாவிடம் உதவி கேளுங்கள் (சங் 138:3)

பயம் இருப்பது ஒரு நல்ல அறிகுறிதான் (சங் 138:6; w19.01 பக். 10 பாரா 10)

டிப்ஸ்: சுருக்கமாகப் பதில் சொல்லும்போது நம்முடைய பயம் குறைவாக இருக்கும். —w23.04 பக். 21 பாரா 7.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 139:21, 22—எல்லாரையுமே கிறிஸ்தவர்கள் மன்னிக்க வேண்டுமா? (it-1-E பக். 862 பாரா 4)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) பொது ஊழியம். (lmd பாடம் 2 குறிப்பு 3)

5. சீஷர்களை உருவாக்குவது

(4 நிமி.) பொது ஊழியம். பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லிவிட்டு, அது எப்படி இருக்கும் என்று காட்டுங்கள். (lmd பாடம் 10 குறிப்பு 3)

6. பேச்சு

(5 நிமி.) ijwyp கட்டுரை 105—பொருள்: கூச்சப்படாமல் மற்றவர்களோடு சகஜமாகப் பழகுவது எப்படி? (th படிப்பு 16)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 59

7. கூச்சமாக இருந்தாலும் உங்களால் சந்தோஷமாக ஊழியம் செய்ய முடியும்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

நீங்கள் கூச்ச சுபாவம் இருக்கும் ஒருத்தரா? ‘இருக்கிற இடம் தெரியாமல் இருந்துவிட வேண்டும்’ என்று நினைக்கும் ஒருத்தரா? மற்றவர்களிடம் பேச வேண்டும் என்று நினைத்தாலே உங்கள் வயிற்றுக்குள் ஏதோமாதிரி பண்ணுகிறதா? கூச்சம் வந்தால் சிலசமயம் நமக்குப் பிடித்த விஷயங்களைக்கூட செய்ய முடியாது. ஆனால், கூச்ச சுபாவத்திலிருந்து நிறைய பேர் வெளியே வந்திருக்கிறார்கள், ஊழியத்தையும் என்ஜாய் பண்ணி செய்கிறார்கள். அவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

கூச்சமாக இருந்தாலும் என்னுடைய சிறந்ததைச் செய்தேன் என்ற வீடியோவைப் பாருங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • பாட்டி கொடுத்த ஆலோசனைப்படி நடந்தது சகோதரி லாராவுக்கு எப்படி உதவியது?

மோசே, எரேமியா, தீமோத்தேயு எல்லாருமே கூச்ச சுபாவத்தோடு போராடியிருக்கலாம் என்று பைபிள் சொல்கிறது. (யாத் 3:11; 4:10; எரே 1:6-8; 1தீ 4:12) ஆனால், அவர்கள் பெரிய பெரிய விஷயங்களை சாதித்திருக்கிறார்கள். ஏனென்றால் யெகோவா அவர்களோடு இருந்தார். (யாத் 4:12; எரே 20:11; 2தீ 1:6-8)

ஏசாயா 43:1, 2-ஐ வாசியுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • தன் மக்களுக்கு யெகோவா என்ன வாக்குக் கொடுத்திருக்கிறார்?

இன்று ஊழியம் செய்ய கூச்சப்படுகிறவர்களுக்கு யெகோவா எப்படி உதவுகிறார்?

ஞானஸ்நானம் எடுப்பது உங்களுக்கு அளவில்லாத சந்தோஷத்தைத் தரும்—சில காட்சிகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • ஊழியம் செய்யும்போது, யெகோவாவுடைய சக்தியும் ஆதரவும் தனக்கு இருந்ததை சகோதரி ஜாக்சன் எப்படிப் புரிந்துகொண்டார்?

  • கூச்ச சுபாவம் இருக்கும் ஒருவருக்கு ஊழியம் எப்படி உதவும்?

8. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 151; ஜெபம்