Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜனவரி 27–​பிப்ரவரி 2

சங்கீதம் 140–143

ஜனவரி 27–​பிப்ரவரி 2

பாட்டு 44; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. நீங்கள் செய்யும் ஜெபத்துக்கு ஏற்ற மாதிரி நடந்துகொள்ளுங்கள்

(10 நிமி.)

ஆலோசனை கிடைத்தால் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருங்கள் (சங் 141:5; w22.02 பக். 12-13 பாரா. 13-14)

யெகோவா எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள் (சங் 143:5; w10 3/15 பக். 32 பாரா 4)

யெகோவா பார்க்கும் விதத்தில் எல்லாவற்றையும் பார்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள் (சங் 143:10; w15 3/15 பக். 32 பாரா 2)

சங்கீதம் 140–143-ல் உதவி கேட்டு தாவீது செய்த ஜெபங்கள் மட்டுமல்ல, அவற்றுக்கு ஏற்ற மாதிரி அவர் எப்படி நடந்துகொண்டார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 140:3—பொல்லாதவர்களுடைய நாக்கு பாம்பின் நாக்கைப் போல இருக்கிறது என்று தாவீது ஏன் சொன்னார்? (it-2-E பக். 1151)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. நடைமுறையான ஒரு உதவியை செய்த பிறகு ஒரு பைபிள் விஷயத்தைப் பற்றிப் பேச ஆரம்பியுங்கள். (lmd பாடம் 3 குறிப்பு 5)

5. மறுபடியும் சந்திப்பது

(3 நிமி.) பொது ஊழியம். ஒருவர் பிஸியாக இருப்பதாகச் சொல்கிறார். (lmd பாடம் 7 குறிப்பு 3)

6. நம்பிக்கைகளை விளக்குவது

(5 நிமி.) நடிப்பு. ijwfq கட்டுரை 21—பொருள்: யெகோவாவின் சாட்சிகள் ஏன் இரத்தம் ஏற்றிக்கொள்வதில்லை? (th படிப்பு 7)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 141

7. மருத்துவ உதவி அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படும் சூழ்நிலைகளுக்குத் தயாராக இருங்கள்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

‘இக்கட்டான காலங்களில் நமக்கு உடனடியாகக் கைகொடுப்பதாக’ யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (சங் 46:1) மருத்துவ உதவி அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படும் சூழ்நிலைகளில் நாம் பயத்தில் உறைந்து போவது இயல்புதான். ஆனால், அந்த மாதிரி சூழ்நிலைகளுக்குத் தயாராக இருக்க தேவையான எல்லாவற்றையும் யெகோவா கொடுத்திருக்கிறார். உதாரணத்துக்கு, அவருடைய அமைப்பின் மூலமாக மருத்துவ முன்கோரிக்கை அட்டை (DPA), அடையாள அட்டை a மற்றும் வேறுசில மருத்துவ ஆவணங்களைக் கொடுத்திருக்கிறார். b நமக்கு உதவுவதற்காக மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவையும் (HLC) கொடுத்திருக்கிறார். இரத்தம் பற்றி கடவுள் கொடுத்திருக்கும் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய இவையெல்லாம் நமக்கு உதவுகிறது.—அப் 15:28, 29.

மருத்துவ அவசரநிலைக்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? என்ற வீடியோவைப் பாருங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • DPA அட்டையைப் பூர்த்தி செய்து வைத்திருந்ததால் சிலர் எப்படி நன்மையடைந்தார்கள்?

  • கர்ப்பிணி தாய்மார்களுக்கான தகவல்கள் (S-401) என்ற ஆவணம் சிலருக்கு எப்படி உதவியிருக்கிறது?

  • நீங்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தாலோ, உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தாலோ, கேன்சர் சிகிச்சை போல் ஏதாவது சிகிச்சை தேவைப்பட்டாலோ இரத்தம் சம்பந்தமான பிரச்சினைகள் வராது என்று தோன்றினால்கூட HLC-யை உடனடியாக தொடர்புகொள்வது ஏன் நல்லது?

8. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.)| பாட்டு 103; ஜெபம்

a ஞானஸ்நானம் எடுத்த பிரஸ்தாபிகள், DPA அட்டையையும் தங்களுடைய பிள்ளைகளுக்காக (மைனர்) அடையாள அட்டையையும் பிரசுர ஊழியரிடமிருந்து வாங்கிக்கொள்ளலாம்.

b தேவைப்படும் சமயத்தில் இந்த ஆவணங்களை நீங்கள் மூப்பர்களிடம் கேட்டு வாங்கிக்கொள்ளலாம்: கர்ப்பிணி தாய்மார்களுக்கான தகவல்கள் (S-401), அறுவை சிகிச்சை அல்லது கீமோதெரபி தேவைப்படுகிற நோயாளிகளுக்கான தகவல்கள் (S-407) மற்றும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பிள்ளையின் பெற்றோர்களுக்கான தகவல் (S-55).