நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் ஜனவரி 2016
இப்படி பேசலாம்
காவற்கோபுரம், மற்றும் சந்தோஷமான செய்தி சிற்றேட்டை ஊழியத்தில் எப்படி பேசி கொடுக்கலாம் என்ற குறிப்புகள் இதில் இருக்கிறது. இதை வைத்து ஊழியத்தில் நீங்கள் சொந்தமாக எப்படி பேசலாம் என்பதை தயாரிக்கலாம்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
யெகோவாவை வணங்க அதிக முயற்சி தேவை
மக்கள் திரும்பவும் யெகோவாவை வணங்க எசேக்கியா என்னென்ன முயற்சிகள் எடுத்தார் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இதற்கு உதவியாக படங்கள், வரைபடங்கள் இருக்கின்றன. அதோடு, 2 நாளாகமம் 29–30-ல் சொல்லப்பட்டுள்ள சம்பவங்களும் வரிசையாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
சந்தோஷமான செய்தி சிற்றேட்டை பயன்படுத்தி எப்படி படிப்பை நடத்துவது
கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி! சிற்றேட்டில் இருந்து பைபிள் படிப்பை நன்றாக நடத்துவதற்கு 5 சுலபமான வழிகள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
யெகோவாவை வணங்க பயன்படுத்தும் இடங்களை கட்டுவதும் பராமரிப்பதும் —நமக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு
யெகோவாவுக்கு செய்யும் பரிசுத்த சேவையை நாம் நேசிக்கிறோம் அதை வைராக்கியத்தோடு செய்கிறோம். வணக்கத்திற்காக நாம் கூடிவரும் இடங்களில் அந்த அன்பையும் வைராக்கியத்தையும் எப்படி காட்டலாம்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
தவறு செய்தவர் உண்மையாக திருந்தும்போது அவரை யெகோவா ஏற்றுக்கொள்கிறார்
மனாசே திருந்தியதால் அவருக்கு நிறைய நன்மைகள் கிடைத்தது. மனாசே பாபிலோனுக்கு பிடித்து செல்லப்படுவதற்கு முன்பும், விடுதலையான பின்பும் அவருடைய ஆட்சி எப்படி இருந்தது என்று ஒப்பிட்டு பாருங்கள். (2 நாளாகமம் 33-36)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
யெகோவா சொன்னதை செய்வார்
எஸ்றா 1-5 அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ள சம்பவங்கள் கால வரிசைப்படி கொடுக்கப்பட்டிருக்கிறது. நிறைய தடைகள் நடுவிலும் யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பி எருசலேமுக்கு வருகிறார்கள், மறுபடியும் யெகோவாவை உண்மையாக வணங்குகிறார்கள், ஆலயத்தை மறுபடியும் கட்டுகிறாரகள்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
யெகோவா தன்னை முழுமனதோடு சேவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்
எஸ்றாவும் அவரோடு எருசலேமுக்கு திரும்பிவந்த மக்களுக்கும் தைரியமும் கடவுள்மேல் உறுதியான நம்பிக்கையும் தேவைப்பட்டது. அவர்கள், யெகோவாவுடைய வணக்கத்தை முழுமனதோடு ஆதரிக்க வேண்டியிருந்தது. அவர்கள் பயணம் செய்ததை கற்பனை செய்து பாருங்கள். இதற்கு உதவியாக படங்கள் வரைபடங்கள் இருக்கின்றன.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... ஒருவரை மறுபடியும் சந்திக்க என்ன செய்யலாம்?
பைபிள் விஷயங்களை ஆர்வமாக கேட்ட ஒருவரை மறுபடியும் சந்திக்க என்ன செய்யலாம் என்பதற்கு 3 வழிகள்.