Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | எஸ்றா 6-10

யெகோவா தன்னை முழுமனதோடு சேவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்

யெகோவா தன்னை முழுமனதோடு சேவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்

எருசலேமுக்கு திரும்பிப்போக எஸ்றா ஏற்பாடுகள் செய்தார்

7:6, 21, 22; 8:26, 27

  • எருசலேமுக்கு போக அர்தசஷ்டா ராஜா எஸ்றாவுக்கு அனுமதி கொடுக்கிறார்

  • யெகோவாவின் ஆலயத்துக்காக எஸ்றா “கேட்டவைகளையெல்லாம்” ராஜா கொடுத்தார். பொன், வெள்ளி, கோதுமை, திராட்சமது, உப்பு, எண்ணெய் போன்றவற்றை கொடுத்தார். இந்திய ரூபாயில் அவற்றின் இப்போதைய மதிப்பு 900 கோடிக்கும் அதிகம் (14 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகம்)

யெகோவா தன்னுடைய மக்களை காப்பாற்றுவார் என்று எஸ்றா முழு நம்பிக்கையோடு இருந்தார்

7:13; 8:21-23

  • எருசலேமுக்கு போகும் வழியில் நிறைய கஷ்டங்கள் இருந்தது

  • ஆபத்தான இடங்கள் வழியாக கிட்டத்தட்ட 1,600 கிலோமீட்டர் (1,000 மைல்) பயணம் செய்திருக்க வேண்டும்

  • 4 மாதங்களுக்கு மேல் பயணம் செய்திருக்க வேண்டும்

  • திரும்பி வந்தவர்களுக்கு தைரியமும் கடவுள்மேல் உறுதியான நம்பிக்கையும் தேவைப்பட்டது. அவர்கள், யெகோவாவுடைய வணக்கத்தை முழு மனதோடு ஆதரிக்க வேண்டியிருந்தது

எஸ்றா கொண்டுபோன பொருள்கள்

750 தாலந்துக்கும் அதிகமான எடையுள்ள தங்கமும் வெள்ளியும் அல்லது சுமார் 3 பெரிய ஆப்பிரிக்க ஆண் யானைகளின் எடைக்கு சமம்!

திரும்பி வந்தவர்கள் சந்தித்த பிரச்சினைகள்

கொள்ளைக்கூட்டம், பாலைவனத்தின் கடும் வெப்பம், ஆபத்தான பிராணிகள்