Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... ஒருவரை மறுபடியும் சந்திக்க என்ன செய்யலாம்?

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... ஒருவரை மறுபடியும் சந்திக்க என்ன செய்யலாம்?

ஏன் முக்கியம்:

பைபிள் விஷயங்களை ஆர்வமாக கேட்ட ஒருவரை திரும்பவும் போய் பார்ப்பது ரொம்ப முக்கியம். ஏனென்றால் நாம் விதைத்த விதைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். (1கொ 3:6) ஆர்வம் காட்டின ஒருவரிடம் பேசி முடிக்கும்போது, அவரை யோசிக்க வைக்கும் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு வர வேண்டும். அப்போது, பதிலை தெரிந்துகொள்ள அவர் ஆர்வமாக இருப்பார். மறுசந்திப்பிற்கு தயாரிப்பது நமக்கும் சுலபமாக இருக்கும். அவரை மறுபடியும் சந்திக்கும்போது, ‘போனமுறை வந்தப்போ உங்ககிட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்றேன்னு சொல்லியிருந்தேன், அதை பத்திதான் இன்னைக்கு பேச வந்திருக்கேன்’ என்று சொல்லி பேச்சை ஆரம்பிக்கலாம்.

எப்படி செய்வது?

  • ஊழியத்தில் என்ன பேசலாம் என்பதை தயாரிக்கும்போதே ஆர்வம் காட்டும் நபரிடம் கடைசியில் என்ன கேள்வியைக் கேட்கலாம் என்றும் தயாரியுங்கள். அந்தக் கேள்வியை, நீங்கள் கொடுக்க நினைக்கும் துண்டுப்பிரதி, பத்திரிகை அல்லது சிற்றேட்டில் இருந்தே தயாரிக்கலாம். அப்படி செய்தால் அடுத்தமுறை போகும்போது அதிலிருந்தே பதில் சொல்லலாம். அல்லது, பைபிள் படிப்பை நடத்த பயன்படுத்தும் புத்தகங்களில் இருந்தும் கேள்வியை தயாரிக்கலாம். அடுத்தமுறை அவரைப் பார்க்கும்போது அந்தப் புத்தகத்தை அவருக்கு கொடுத்து அந்தக் கேள்விக்கான பதிலை கலந்து பேசலாம்.

  • ஆர்வம் காட்டிய ஒருவரிடம் பேசி முடிக்கும்போது, நீங்கள் தயாரித்த கேள்வியைக் கேளுங்கள். அடுத்தமுறை அவரை பார்க்கும்போது அதற்கான பதிலை சொல்வதாக சொல்லுங்கள். முடிந்தால், அவருடைய ஃபோன் நம்பரையும் முகவரியையும் வாங்கிக்கொள்ளுங்கள்.

  • சொன்ன நேரத்தில் மறக்காமல் அவரைப் போய் பாருங்கள்.—மத் 5:37.