Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

‘யெகோவாவே, உங்களை நம்பியிருக்கிறேன்’

‘யெகோவாவே, உங்களை நம்பியிருக்கிறேன்’

எல்லா சமயங்களிலும் நாம் யெகோவாவை நம்பியிருக்க வேண்டும். (சங் 25:1, 2) 2,800 வருஷங்களுக்கு முன்பு யூதாவில் இருந்த மக்கள் கடவுள்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு ஒரு பெரிய சோதனை வந்தது. அப்போது நடந்த சம்பவங்களிலிருந்து நாம் நிறைய பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். (ரோ 15:4) ‘யெகோவாவே, உங்களை நம்பியிருக்கிறேன்’ என்ற வீடியோவை பார்த்த பிறகு, பின்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

  1. எசேக்கியாவின் வாழ்க்கையில் என்ன சோதனை வந்தது?

  2. அசீரியர்கள் எருசலேமை சுற்றி வளைக்க போகிறார்கள் என்று தெரிந்ததும் நீதிமொழிகள் 22:3-ல் சொல்லப்பட்டிருப்பதை எசேக்கியா எப்படிப் பின்பற்றினார்?

  3. அசீரியர்களிடம் சரணடைவதைப் பற்றியோ எகிப்தோடு கூட்டணி வைத்துக்கொள்வதைப் பற்றியோ எசேக்கியா ஏன் நினைத்துக்கூட பார்க்கவில்லை?

  4. எசேக்கியாவிடம் இருந்து நாம் என்ன நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

  5. யெகோவாமீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு இன்று எப்படிப்பட்ட சோதனைகள் வரலாம்?

யெகோவாவையே நான் முழுமையாக நம்பியிருக்கிறேன் என்று எப்போதெல்லாம் காட்டுவேன்?