ஜனவரி 2-8
ஏசாயா 24–28
பாட்டு 12; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவா தன்னுடைய மக்களைக் கவனித்துக்கொள்கிறார்”: (10 நிமி.)
ஏசா 25:4, 5—தன்னை வணங்கும் ஒவ்வொருவருக்கும் யெகோவா பலத்த கோட்டையாக இருக்கிறார் (ip-1 பக். 272 பாரா 5)
ஏசா 25:6—இன்று யெகோவா, அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றுகிறார்; அமைப்பின் மூலமாக நமக்கு நிறைய சொல்லிக்கொடுக்கிறார் (w16.05 பக். 24 பாரா 4; ip-1 பக். 273 பாரா. 6-7)
ஏசா 25:7, 8—சீக்கிரத்தில் பாவத்தையும் மரணத்தையும் அடியோடு ஒழித்துக்கட்டுவார் (w14 9/15 பக். 26 பாரா 15; ip-1 பக். 273-274 பாரா. 8-9)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
ஏசா 26:15—“தேசத்தின் எல்லைகளை” யெகோவா விரிவாக்கும்போது அதற்கு நாம் எப்படி உதவலாம்? (w15 7/15 பக். 11 பாரா 18)
ஏசா 26:20—இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் ‘உள்ளறைகள்’ எதை அர்த்தப்படுத்துகின்றன? (w13 3/15 பக். 23 பாரா. 15-16)
ஏசாயா 24 முதல் 28 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ஏசா 28:1-13
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்?: (15 நிமி.) முதலில் ஒரு வீடியோவை காட்டுங்கள். பிறகு, அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளைக் கலந்து பேசுங்கள். மற்ற இரண்டு வீடியோக்களுக்கும் அப்படியே செய்யுங்கள். ஜனவரி மாதத்தில், நாம் ஊழியத்தில் சந்திக்கும் நபர் அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினால், உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்பிகிறீர்களா? என்ற துண்டுப்பிரதியை கொடுக்கலாம். வாய்ப்பு கிடைக்கும்போது பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவை காட்ட சொல்லுங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சபை தேவைகள்: (15 நிமி.) நேரம் இருந்தால், ஜூலை 15, 2016 காவற்கோபுரத்தில் பக்கங்கள் 3-6 வரையுள்ள “தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள் கானாவில்” என்ற கட்டுரையில் இருக்கும் அனுபவங்களைச் சொல்லுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 16 பாரா. 16-29, பெட்டி பக். 142, ‘சிந்திக்க’ பக். 144
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 16; ஜெபம்