கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
துன்புறுத்தப்படும் சகோதர சகோதரிகளுக்காக ஜெபம் செய்யுங்கள்
நாம் செய்யும் ஊழியத்தைத் தடுப்பதற்காக சாத்தான் பல கஷ்டங்களைக் கொடுப்பான் என்று பைபிள் சொல்கிறது. (யோவா 15:20; வெளி 12:17) மற்ற நாடுகளில் துன்புறுத்தப்படும் நம் சகோதர சகோதரிகளுக்கு எப்படி உதவலாம்? அவர்களுக்காக நாம் ஜெபம் செய்யலாம். “நீதிமானின் மன்றாட்டு மிகவும் வலிமையுள்ளது” என்று பைபிள் சொல்கிறது.—யாக் 5:16.
என்னென்ன விஷயங்களுக்காக நாம் ஜெபம் செய்யலாம்? அவர்கள் பயப்படாமல் தைரியமாக இருக்க உதவும்படி நாம் யெகோவாவிடம் கேட்கலாம். (ஏசா 41:10-13) ஊழியம் செய்வதற்கு அதிகாரிகள் எந்தத் தடையும் போடாமல் இருக்க உதவும்படியும் கேட்கலாம். அப்போதுதான், அவர்களால் ‘தொல்லையில்லாமல் அமைதியாக வாழ’ முடியும்.—1தீ 2:1, 2.
பவுலும் பேதுருவும் துன்புறுத்தப்பட்டபோது முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்கள் அவர்களுடைய பெயரைச் சொல்லி ஜெபம் செய்தார்கள். (அப் 12:5; ரோ 15:30, 31) இன்று துன்புறுத்தப்படும் எல்லா சகோதர சகோதரிகளுடைய பெயர்களும் நமக்கு தெரியாவிட்டாலும், அவர்கள் இருக்கும் நாடு அல்லது சபையின் பெயரைச் சொல்லி நாம் ஜெபம் செய்யலாம்.