“ஒரு ராஜா நீதியாக ஆட்சி செய்வார்”
சபையை வழிநடத்த, “அதிபதிகளை” அதாவது மூப்பர்களை நம் ராஜா இயேசு நியமித்திருக்கிறார்
-
மூப்பர்கள், “புயலிலிருந்து பாதுகாக்கும் புகலிடமாக” இருக்கிறார்கள். சகோதர சகோதரிகளின் வாழ்க்கையில் வரும் புயல் போன்ற பிரச்சினைகளையும் சோதனைகளையும் சமாளிக்க உதவுகிறார்கள்
-
“தண்ணீரில்லாத தேசத்தில் பாயும் நீரோடைகளாக” இருக்கிறார்கள். கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கிறவர்களுக்கு சுத்தமான தண்ணீர் போல் இருக்கும் பைபிள் சத்தியங்களைச் சொல்லிக்கொடுக்கிறார்கள்
-
“சுட்டெரிக்கும் வெயிலில் நிழல் தரும் பெரிய கற்பாறையாக” இருக்கிறார்கள். சோர்ந்துபோய் இருக்கிறவர்களுக்கு பைபிளில் இருந்து நல்ல வழிநடத்துதலையும் புத்துணர்ச்சியையும் தருகிறார்கள்