இப்படிப் பேசலாம்
இந்த உலகம் யார் கையில்? (T-33)
கேள்வி: இன்னைக்கு விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறியிருக்கு. இருந்தாலும், அதனால நிறைய பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கு. காத்து, தண்ணீனு நமக்கு தேவையான எதுவுமே சுத்தமா இல்ல. அதோட, மனுஷங்க மத்தியில ஒற்றுமயும் இல்ல, சண்டை சச்சரவுதான் அதிகமாயிருக்கு. ஏன்னா எல்லாரும் அவங்களோட சொந்த லாபத்ததான் பாக்குறாங்க. இந்த நிலைமைய யாராவது மாத்த முடியும்னு நினைக்கிறீங்களா?
வசனம்: சங் 72:13, 14
பிரசுரம்: இந்த உலகத்த யார் ஆட்சி செய்றாங்கனு இந்த துண்டுப்பிரதில இருக்கு. அதோட, மனுஷங்களோட சுயநலத்தால ஏற்பட்ட எல்லா பாதிப்புகளையும் நம்மள படைச்ச கடவுள் எப்படி சரிசெய்வார்னும் இருக்கு.
உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்
உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? (kt)
கேள்வி: கடவுளுக்கு நம்மமேல உண்மையிலேயே அக்கறை இருக்கா? துன்பம் இல்லாத காலம் வருமா? சந்தோஷமா வாழ என்ன செய்யணும்? இதுபோல கேள்விகள நிறைய பேர் யோசிக்கிறாங்க. இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிஞ்சிக்க முடியும்னு நினைக்கிறீங்களா?
வசனம்: யோவா 17:17
பிரசுரம்: இந்த துண்டுப்பிரதியில அந்த கேள்விகளுக்கான பதில் இருக்கு. அத தெரிஞ்சிக்கிறது உங்களுக்கு சந்தோஷமாவும் திருப்தியாவும் இருக்கும்.
நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்.