நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் ஜனவரி 2018
இப்படிப் பேசலாம்
பைபிள் நம்முடைய காலத்துக்கும் ஒத்துவருவதைப் பற்றி ஊழியத்தில் எப்படிப் பேசலாம் என்பதற்கான குறிப்புகள்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது”
யோவான் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார், கடவுளுடைய விருப்பத்தைச் செய்ய தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். நாமும் எளிமையாக வாழும்போது கடவுளுக்கு அதிகமாகச் சேவை செய்ய முடியும்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
இயேசுவின் மலைப்பிரசங்கம் சொல்லித்தரும் பாடங்கள்
ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருப்பதன் அர்த்தம் என்ன? ஆன்மீக உணவை உட்கொள்ளும் பழக்கத்தை நாம் எப்படி இன்னும் நன்றாக வளர்த்துக்கொள்ளலாம்?
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
முதலில் உங்கள் சகோதரனோடு சமாதானமாகுங்கள்—எப்படி?
நம் சகோதரரோடு சமாதானமாவதற்கும் கடவுள் நம் வணக்கத்தை ஏற்றுக்கொள்வதற்கும் உள்ள சம்பந்தத்தைப் பற்றி இயேசு என்ன கற்றுக்கொடுத்தார்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுங்கள்
நாம் நிறைய விஷயங்களுக்காக ஜெபம் செய்யலாம் என்றாலும், முக்கியமாக எதைப் பற்றி ஜெபம் செய்ய வேண்டும்?
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
கவலைப்படுவதை நிறுத்துங்கள்
கவலைப்படுவதை நிறுத்த வேண்டுமென்று இயேசு தன்னுடைய மலைப்பிரசங்கத்தில் தன் சீஷர்களிடம் சொன்னபோது எதை அர்த்தப்படுத்தினார்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
இயேசு மக்களை நேசித்தார்
மக்களைக் குணப்படுத்தியபோது இயேசு தன் வல்லமையைக் காட்டினார். அதைவிட முக்கியமாக, அளவுகடந்த அன்பையும் கரிசனையையும் காட்டினார்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
இயேசு புத்துணர்ச்சி தந்தார்
நாம் ஞானஸ்நானம் எடுக்கும்போது இயேசுவின் நுகத்தடியை ஏற்றுக்கொள்கிறோம், அதாவது அவருடைய சீஷர்களாக ஆகிறோம். அப்போது, சவால்கள் நிறைந்த வேலையையும் பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்கிறோம். இருந்தாலும், அது புத்துணர்ச்சியைத் தருகிறது.