ஜனவரி 15-21
மத்தேயு 6-7
பாட்டு 40; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுங்கள்”: (10 நிமி.)
மத் 6:10—மாதிரி ஜெபத்தின் ஆரம்பத்திலேயே கடவுளுடைய அரசாங்கம் குறிப்பிடப்பட்டிருப்பது, அதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது (bhs பக். 178 பாரா 12)
மத் 6:24—நாம் ஒரே நேரத்தில் கடவுளுக்கும் செல்வத்துக்கும் அடிமையாக இருக்க முடியாது (“அடிமையாக இருக்க” என்ற மத் 6:24-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
மத் 6:33—கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் தருகிற உண்மையுள்ள ஊழியர்களின் தேவைகளை யெகோவா பார்த்துக்கொள்வார் (“எப்போதுமே . . . முதலிடம் கொடுங்கள்,” “நீதிநெறிகளுக்கும்” என்ற மத் 6:33-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்; w16.07 பக். 12 பாரா 18)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
மத் 7:12—ஊழியத்துக்கான அறிமுகக் குறிப்புகளைத் தயாரிக்கும்போது இந்த வசனத்தை எப்படிப் பொருத்தலாம்? (w14 5/15 பக். 14-15 பாரா. 14-16)
மத் 7:28, 29—இயேசுவின் போதனையைக் கேட்ட மக்கள் எப்படி உணர்ந்தார்கள், ஏன்? (“அவர் கற்பித்த விதத்தை,” “அசந்துபோனார்கள்,” “அவர்களுடைய வேத அறிஞர்களைப் போல் கற்பிக்காமல்” என்ற மத் 7:28, 29-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)
மத்தேயு 6 முதல் 7 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மத் 6:1-18
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகச் சொல்லப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள்.
முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். முதல் சந்திப்பில் நீங்கள் பார்த்த நபர் வீட்டில் இல்லை, அவருடைய குடும்பத்திலுள்ள ஒருவர்தான் இருக்கிறார்.
இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 81
“கவலைப்படுவதை நிறுத்துங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். முதலில், இயேசுவின் உதாரணங்களில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்—பறவைகளையும் காட்டுப் பூக்களையும் கூர்ந்து கவனியுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 12 பாரா. 15-22, பெட்டி பக். 160
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 21; ஜெபம்