கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
கவலைப்படுவதை நிறுத்துங்கள்
“கவலைப்படுவதை நிறுத்துங்கள்” என்று இயேசு தன்னுடைய மலைப்பிரசங்கத்தில் சொன்னார். (மத் 6:25) சாத்தானுடைய உலகத்தில் வாழும் பாவ இயல்புள்ள மனிதர்களுக்கு அவ்வப்போது கவலைகள் வருவது சகஜம்தான். ஆனால், அளவுக்குமீறி கவலைப்படக் கூடாதென்று இயேசு தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (சங் 13:2) ஏன்? ஏனென்றால், நாம் அளவுக்கு அதிகமாகக் கவலைப்பட்டால், ஒருவேளை தினசரி தேவைகளுக்காகக்கூட அப்படிக் கவலைப்பட்டால், நம் கவனம் சிதறிவிடும்; அப்போது, கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் தருவது மிகவும் கஷ்டமாகிவிடும். (மத் 6:33) இயேசு தொடர்ந்து சொன்ன விஷயங்கள், அநாவசியமாகக் கவலைப்படுவதை நிறுத்த நமக்கு உதவும்.
-
மத் 6:26—பறவைகளைக் கவனிப்பதன் மூலம் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (w16.07 பக். 9-10 பாரா. 11-13)
-
மத் 6:27—அநாவசியமாகக் கவலைப்படுவதால் நம் நேரமும் சக்தியும்தான் வீணாகின்றன என்று ஏன் சொல்லலாம்? (w05 11/1 பக். 22 பாரா 5)
-
மத் 6:28-30—காட்டுப் பூக்களைக் கவனிப்பதன் மூலம் நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (w16.07 பக். 11 பாரா. 15-16)
-
மத் 6:31, 32—கிறிஸ்தவர்கள் எந்தெந்த விதங்களில் உலகத்தாரிலிருந்து வித்தியாசமாக இருக்கிறார்கள்? (w16.07 பக். 11 பாரா 17)
நான் இதைப் பற்றி இனி கவலைப்படப் போவதில்லை: