உடைந்த உள்ளங்களை யெகோவா கைவிட மாட்டார்
பத்சேபாளோடு செய்த பெரிய பாவத்தை நாத்தான் தீர்க்கதரிசி தாவீதுக்கு உணர்த்தினார். அந்த தவறை உணர்ந்து சங்கீதம் 51-ஐ எழுதினார். தாவீதின் மனசாட்சி அவரை குற்றப்படுத்தியது. செய்த தப்பை தாழ்மையோடு ஒத்துக்கொண்டார்.—2 சா 12:1-14.
பெரிய பாவத்தை செய்திருந்தாலும் தாவீதால் மறுபடியும் யெகோவாவோடு உள்ள நட்பை பலப்படுத்த முடியும்
-
செய்த தவறை உணர்ந்து, அதை யெகோவாவிடம் சொல்லும் வரை அவருடைய மனசாட்சி குத்திக்கொண்டே இருந்தது
-
தன்னை கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதை நினைத்தபோது, எலும்புகள் நொறுங்கியது போல் உணர்ந்தார்
-
தன்னை யெகோவா மன்னிக்க வேண்டும், மறுபடியும் யெகோவாவோடு நட்பை பலப்படுத்திக்கொள்ள வேண்டும், இழந்த மன நிம்மதி திரும்ப கிடைக்க வேண்டும் என ஏங்கினார்
-
கீழ்ப்படிதலுள்ள இருதயத்தை தரும்படி யெகோவாவிடம் கெஞ்சினார்
-
தன்னை யெகோவா மன்னிப்பார் என தாவீது உறுதியாக நம்பினார்