“யெகோவாமேல் உங்கள் பாரத்தை வைத்துவிடுங்கள்”
தாவீது அவருடைய வாழ்க்கையில் தாங்க முடியாதளவு நிறைய கஷ்டங்களை அனுபவித்தார். 55-வது சங்கீதத்தை எழுதி முடிப்பதற்குள் இந்தக் கஷ்டங்களை அவர் அனுபவித்தார்:
-
அவமானம்
-
துன்புறுத்தல்
-
குற்ற உணர்ச்சி
-
குடும்பத்தில் பிரச்சினைகள்
-
வியாதி
-
நம்பிக்கை துரோகம்
தாங்க முடியாதளவு கஷ்டங்களை தாவீது அனுபவித்தாலும் அதை அவரால் சமாளிக்க முடிந்தது. அதுபோன்ற கஷ்டங்களை அனுபவிக்கும்போது தாவீதின் இந்த ஆலோசனை நமக்கு உதவும்: ‘யெகோவாமேல் உங்கள் பாரத்தை வைத்துவிடுங்கள்.’
இதை கடைப்பிடிக்க என்ன செய்யலாம்?
-
ஏதாவது பிரச்சினையில் அல்லது கவலையில் மூழ்கியிருக்கும்போது மனதில் இருப்பதை எல்லாம் யெகோவாவிடம் கொட்டுங்கள்
-
பிரச்சினைகளை சமாளிக்க பைபிள் மற்றும் அமைப்பு தரும் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்
-
பைபிள் தரும் ஆலோசனையின்படி அந்த கஷ்டமான சூழ்நிலையிலிருந்து மீண்டு வர முடிந்தளவு முயற்சி எடுங்கள்