Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... வீடியோக்களை பயன்படுத்தி சொல்லிக்கொடுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... வீடியோக்களை பயன்படுத்தி சொல்லிக்கொடுங்கள்

ஏன் முக்கியம்:

கண்ணால் பார்த்தும் காதால் கேட்டும் கற்றுக்கொள்ள வீடியோக்கள் உதவி செய்கிறது. இப்படி கற்றுக்கொள்ளும் விஷயங்கள் மனதில் ஆழமாக பதிகிறது. ஒரு விஷயத்தின்மீது அதிக கவனம் செலுத்தவும் அதை ஞாபகத்தில் வைக்கவும் உதவி செய்கிறது. இப்படி கற்றுக்கொடுப்பதில் யெகோவா சிறந்த உதாரணமாக இருக்கிறார்.—அப் 10:9-16; வெளி 1:1.

சந்தோஷமான செய்தி சிற்றேட்டின் 2-வது மற்றும் 3-வது பாடங்களுக்கான வீடியோக்கள்: கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கா? பைபிளை எழுதியது யார்? பைபிளை நம்பலாமா? இந்த வீடியோக்களை நன்றாக பயன்படுத்தலாம். பைபிளை ஏன் படிக்க வேண்டும்?, பைபிள் படிப்பு எப்படி இருக்கும்?, ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? போன்ற வீடியோக்கள், பைபிளை படிப்பதற்கும் நம்முடைய கூட்டங்களுக்கு வருவதற்கும் மற்றவர்களுடைய ஆர்வத்தை அதிகமாக்கும். நம்முடன் பைபிள் படிப்பவர்களுக்கு மற்ற வீடியோக்களையும் காட்டி சொல்லிக்கொடுக்கலாம்.—km 5/13 3.

எப்படி செய்வது?

  • ஊழியத்தில் காட்ட நினைக்கும் வீடியோவை முன்பே டவுன்லோட் செய்யுங்கள்

  • வீடியோ சம்பந்தமாக என்ன கேள்விகளைக் கேட்கலாம் என்று தயாரியுங்கள்

  • அவருடன் சேர்ந்து வீடியோவை பாருங்கள்

  • முக்கிய குறிப்புகளை கலந்து பேசுங்கள்

இப்படி செய்துபாருங்கள்: