யெகோவாவை நம்புங்கள், நல்லதையே செய்யுங்கள்
“நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே”
-
கெட்டவர்கள் வெற்றியடைவதை பார்த்து ஏமாந்துவிடாமல் யெகோவாவுக்கு தொடர்ந்து சேவை செய்யுங்கள். இன்னும் யெகோவாவுக்காக என்ன செய்யலாம் என்றும், அவர் தரும் ஆசீர்வாதங்களைப் பற்றியும் யோசித்துப் பாருங்கள்
“கர்த்தரை நம்பி நன்மைசெய்”
-
கவலைகளை சமாளிக்க யெகோவா உதவி செய்வார் என்று நம்புங்கள். அவருக்கு எப்போதும் உண்மையாக இருக்க உங்களுக்கு உதவி செய்வார்
-
கடவுளுடைய அரசாங்கத்தின் சந்தோஷமான செய்தியை எல்லாருக்கும் சொல்லுங்கள், அந்த வேலையை சுறுசுறுப்பாக செய்யுங்கள்
“கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு”
-
யெகோவாவைப் பற்றி இன்னும் நன்றாக தெரிந்துகொள்ள பைபிளை படித்து அதில் இருக்கும் விஷயங்களை யோசித்துப் பாருங்கள். அதற்கு ஒவ்வொரு நாளும் நேரம் ஒதுக்குங்கள்
“உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து [அதாவது, ஒப்படைத்துவிடு]”
-
எந்த பிரச்சினை வந்தாலும் அதை சமாளிக்க யெகோவா உதவி செய்வார் என்று முழு நம்பிக்கையோடு இருங்கள்
-
யெகோவாவை வணங்குவதால் நம்மைப் பற்றி மற்றவர்கள் தவறாக பேசலாம், அடிக்கலாம் அல்லது கேலி கிண்டல் செய்யலாம். அப்போது, நாம் பதிலுக்கு எதையும் செய்யாமல் நல்லதையே செய்ய வேண்டும்
“கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு”
-
அவசரப்பட்டு தவறாக எதையாவது செய்தால், சந்தோஷத்தையும் யெகோவா தரும் பாதுகாப்பையும் இழந்துவிடுவோம்
‘சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்’
-
யாராவது உங்களிடம் அநியாயமாக நடந்துகொண்டால் கோபப்படாமல், யெகோவா அதை சரி செய்யும்வரை பொறுமையாக காத்திருங்கள்
-
சகோதர சகோதரிகளுக்கு ஆதரவாக இருங்கள். வேதனையில் மூழ்கி இருப்பவர்களிடம் ஆறுதலாக பேசுங்கள். பூஞ்சோலை பூமியில் சீக்கிரத்தில் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களைப் பற்றி அவர்களிடம் சொல்லுங்கள்