Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் வெற்றி பெற சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுங்கள்

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் வெற்றி பெற சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுங்கள்

கடவுள் பக்தியுள்ள பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் யெகோவாவின் உண்மை ஊழியர்களாக ஆக வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். அதற்கு, பிஞ்சுப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுடைய மனதில் பைபிள் போதனைகளைப் பதிய வைக்க வேண்டும். (உபா 6:7; நீதி 22:6) இப்படிச் செய்வதற்கு பெற்றோர்கள் நிறைய தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், அந்தத் தியாகங்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.—3யோ 4.

யோசேப்பு மற்றும் மரியாளிடமிருந்து பெற்றோர்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். ‘ஒவ்வொரு வருஷமும் பஸ்கா பண்டிகைக்காக எருசலேமுக்குப் போவது அவர்களுடைய வழக்கமாக’ இருந்தது. அப்படிச் செய்வதற்கு அதிக முயற்சியும் பணமும் தேவைப்பட்டன; இருந்தாலும், அவர்கள் தொடர்ந்து பண்டிகைக்குப் போனார்கள். (லூ 2:41) இப்படி, குடும்பத்தின் ஆன்மீகத் தேவைகளுக்கு முதலிடம் கொடுத்தார்கள். அவர்களைப் போலவே இன்றிருக்கும் பெற்றோர்களும் தங்களுக்குக் கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, தங்கள் சொல்லாலும் செயலாலும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம். இப்படி, அவர்களை சரியான பாதையில் வழிநடத்தலாம்.—சங் 127:3-5.

ஒரு வாய்ப்பையும் விடவில்லை என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • ஜான் மற்றும் ஷேரன் ஷில்லர் தம்பதி, பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்போடு சேர்த்து, கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கும் எப்படி முதலிடம் கொடுத்தார்கள்?

  • ஒவ்வொரு பிள்ளைக்கும் ஏற்றபடி கண்டித்துத் திருத்துவது ஏன் முக்கியம்?

  • விசுவாசப் பரீட்சையில் வெற்றி பெற, பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் எப்படிப் பயிற்சி கொடுக்கலாம்?

  • உங்கள் பிள்ளை ஆன்மீக முன்னேற்றம் செய்ய யெகோவாவின் அமைப்பு தந்திருக்கும் எந்தக் கருவியை நீங்கள் பயன்படுத்தியிருக்கிறீர்கள்?

உங்கள் குடும்பத்தில் ஆன்மீகக் காரியங்களுக்கு முதலிடம் கொடுங்கள்