கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சோஷியல் நெட்வொர்க்—படுகுழியில் விழுந்துவிடாதீர்கள்!
ஏன் முக்கியம்: பெரும்பாலான கருவிகளைப் போலவே, சோஷியல் நெட்வொர்க்கிலும் நன்மைகளும் தீமைகளும் இருக்கின்றன. இதைப் பயன்படுத்த வேண்டாமென்று சில கிறிஸ்தவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். வேறு சிலர், குடும்பத்தோடும் நண்பர்களோடும் தொடர்புகொள்ள இதைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இதை நாம் தவறாகப் பயன்படுத்த வேண்டுமென்று சாத்தான் விரும்புகிறான். நாம் அப்படிச் செய்தால் நம்முடைய நற்பெயரும் யெகோவாவோடு நமக்கு இருக்கும் பந்தமும் கெட்டுவிடும். சோஷியல் நெட்வொர்க்கில் இருக்கும் ஆபத்துகளை அடையாளம் காணவும் அவற்றைத் தவிர்க்கவும், இயேசுவைப் போலவே நாமும் பைபிள் நியமங்களைப் பயன்படுத்தலாம்.—லூ 4:4, 8, 12.
தவிர்க்க வேண்டிய படுகுழிகள்:
-
சோஷியல் மீடியாவை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது. சோஷியல் மீடியாவை அல்லது சோஷியல் நெட்வொர்க்கை மணிக்கணக்காகப் பயன்படுத்தும்போது, ஆன்மீகக் காரியங்களுக்கு செலவு செய்ய வேண்டிய பொன்னான நேரம் வீணாகிவிடும்
-
சந்தேகத்துக்கு இடமான விஷயங்களைப் பார்ப்பது. கெட்ட ஆசைகளைத் தூண்டும் படங்களைப் பார்க்கும்போது, ஆபாசத்துக்கு அடிமையாகிவிடவோ ஒழுக்கக்கேட்டில் விழுந்துவிடவோ வாய்ப்பிருக்கிறது. விசுவாச துரோகிகளுடைய கட்டுரைகளையோ வெப்சைட்டுகளையோ படிப்பது, நம் விசுவாசத்தைக் கெடுத்துவிடும்
பைபிள் நியமங்கள்: எபே 5:15, 16; பிலி 1:10
-
மோசமான கருத்துகளை அல்லது ஃபோட்டோக்களைப் போடுவது. நம் இதயம் நயவஞ்சகமானது! சோஷியல் நெட்வொர்க்கில் மோசமான கருத்துகளைப் பதிவு செய்யவோ கண்ணியமற்ற போட்டோக்களைப் போடவோ அது நம்மைத் தூண்டலாம். இப்படிச் செய்வது, ஒருவருடைய நற்பெயரைக் கெடுத்துவிடும்; யெகோவாவோடு இருக்கும் பந்தத்தை பலவீனமாக்கிவிடும்
சோஷியல் நெட்வொர்க்—புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறீர்களா? என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் சூழ்நிலைகளை எப்படித் தவிர்க்கலாம் என்று யோசித்துப்பாருங்கள்: