Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றுங்கள்

கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றுங்கள்

இயேசு நமக்கு ஒரு நல்ல முன்மாதிரி! முக்கியமாக, சோதனைகளோ துன்புறுத்தல்களோ வரும்போது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அவரைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம். (1பே 2:21-23) வேதனையை அனுபவித்தபோதும் அவமானப்படுத்தப்பட்டபோதும் அவர் பழிக்குப் பழி வாங்கவில்லை. (மாற் 15:29-32) சகித்திருக்க எது அவருக்கு உதவியது? யெகோவாவின் விருப்பத்தை மட்டுமே செய்ய வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்ததுதான்! (யோவா 6:38) அதோடு, ‘தன் முன்னால் வைக்கப்பட்டிருந்த சந்தோஷத்தின்மீது’ தன் கண்களைப் பதிய வைத்தார்.—எபி 12:2.

நம் நம்பிக்கைகளின் காரணமாக யாராவது நம்மை மோசமாக நடத்தினால் என்ன செய்வது? உண்மைக் கிறிஸ்தவர்கள் “தீமைக்குத் தீமை” செய்ய மாட்டார்கள். (ரோ 12:14, 17) கிறிஸ்து கஷ்டங்களைச் சகித்ததுபோல் நாமும் சகித்தால், சந்தோஷமாக இருப்போம்; ஏனென்றால், கடவுளுடைய அங்கீகாரம் நமக்குக் கிடைக்கும்.—மத் 5:10-12; 1பே 4:12-14.

யெகோவாவோட பெயர்தான் ரொம்ப முக்கியம் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • சகோதரி பொட்ஸிங்கர் தனிச் சிறையில் இருந்தபோது, நேரத்தை எப்படி ஞானமாகப் பயன்படுத்தினார்?

  • பல சித்திரவதை முகாம்களில் இருந்தபோது, சகோதரர் மற்றும் சகோதரி பொட்ஸிங்கர் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தார்கள்?

  • சகித்திருக்க எது அவர்களுக்கு உதவியது?

கஷ்டங்களை அனுபவிக்கும்போது கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றுங்கள்