Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

தனிப்பட்ட படிப்பை அதிக பலன்தரும் விதத்தில் செய்யுங்கள்

தனிப்பட்ட படிப்பை அதிக பலன்தரும் விதத்தில் செய்யுங்கள்

ஏன் முக்கியம்? தனிப்பட்ட படிப்பின்போது, பைபிள் சத்தியத்தின் ‘அகலமும் நீளமும் உயரமும் ஆழமும் என்னவென்று நம்மால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.’ (எபே 3:18) இந்தப் பொல்லாத உலகத்தில், ‘வாழ்வு தரும் வார்த்தையை உறுதியாகப் பிடித்துக்கொள்ளவும்’ குற்றமோ களங்கமோ இல்லாமல் வாழவும் அது நமக்கு உதவி செய்யும். (பிலி 2:15, 16) தனிப்பட்ட படிப்பின்போது நமக்குத் தேவையான விஷயங்களை நாமே தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். பைபிளை வாசிக்கவும் ஆராய்ந்து படிக்கவும் நாம் செலவிடும் நேரத்தை எப்படி முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்?

எப்படிச் செய்வது?

  • தனிப்பட்ட படிப்புக்காக (புத்தக வடிவிலோ, எலெக்ட்ரானிக் வடிவிலோ) நீங்கள் வைத்திருக்கும் பைபிளில் வசனங்களைக் கோடுபோட்டு வையுங்கள், குறிப்புகளையும் எழுதி வையுங்கள்

  • பைபிளைப் படிக்கும்போது, ‘யார்? எப்போது? எங்கே? ஏன்? எப்படி?’ போன்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்

  • உண்மைகளை அலசிப் பாருங்கள். ஒரு விஷயத்தை அல்லது வசனத்தை ஆராய, ஆராய்ச்சிக் கருவிகளைப் பயன்படுத்துங்கள்

  • நீங்கள் படிக்கும் விஷயம் உங்களுக்கு எப்படிப் பொருந்துகிறது என்பதை நன்றாக யோசித்துப் பாருங்கள்

  • கற்றுக்கொள்ளும் விஷயங்களைத் தினசரி வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள்.—லூ 6:47, 48

“உறுதியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்”—ஆழமாகப் படிப்பதன் மூலம்! என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • தனிப்பட்ட படிப்பைப் பற்றிச் சிலர் என்ன சொல்கிறார்கள்?

  • ஒவ்வொரு முறையும் தனிப்பட்ட படிப்பை ஆரம்பிப்பதற்கு முன்பு நாம் ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?

  • பைபிள் பதிவு ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள எது நமக்கு உதவி செய்யும்?

  • தனிப்பட்ட படிப்புக்காக நாம் பயன்படுத்தும் பைபிளில் எதையெல்லாம் குறித்து வைக்கலாம்?

  • கடவுளுடைய வார்த்தையைப் படிப்பது மட்டுமல்லாமல், அதைப் பற்றி ஆழ்ந்து யோசிப்பதும் ஏன் முக்கியம்?

  • தனிப்பட்ட படிப்பில் கற்றுக்கொள்ளும் விஷயங்களை நாம் என்ன செய்ய வேண்டும்?

“உங்களுடைய சட்டத்தை எவ்வளவாய் நேசிக்கிறேன்! நாளெல்லாம் அதைப் பற்றியே ஆழமாக யோசிக்கிறேன்.”—சங் 119:97