கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
யெகோவா என்ன நினைப்பார்?
ஒரு தீர்மானத்தை எடுப்பதற்குமுன், அது சிறியதோ பெரியதோ, ‘யெகோவா என்ன நினைப்பார்?’ என்று யோசிக்கிறோமா? அவருடைய மனதிலுள்ள எல்லாவற்றையுமே நம்மால் புரிந்துகொள்ள முடியாதுதான். ஆனால், போதுமான அளவுக்கு அவரைப் பற்றி பைபிளில் அவர் பதிவு செய்திருக்கிறார்; “எந்தவொரு நல்ல வேலையையும் செய்வதற்கு” அவை நமக்கு உதவுகின்றன. (2தீ 3:16, 17; ரோ 11:33, 34) யெகோவாவின் விருப்பத்தை இயேசு தெளிவாகப் புரிந்து வைத்திருந்தார், தன் வாழ்க்கையில் அதற்கு முதலிடம் கொடுத்தார். (யோவா 4:34) நாமும், யெகோவாவுக்குப் பிரியமான தீர்மானங்களை எப்போதும் எடுப்போமாக!—யோவா 8:28, 29; எபே 5:15-17.
யெகோவாவின் விருப்பத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டே இருங்கள் (லேவி 19:18) என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
பைபிள் நியமங்களை நாம் ஏன் கடைப்பிடிக்க வேண்டும்?
-
இசையைத் தேர்ந்தெடுக்க எந்த நியமங்கள் உதவும்?
-
உடை, முடி அலங்கார விஷயத்தில் எந்த நியமங்கள் உதவும்?
-
வேறென்ன விஷயங்களில் நாம் பைபிள் நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்?
-
யெகோவாவின் விருப்பத்தை நாம் எப்படி இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளலாம்?