கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பொழுதுபோக்கை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள்
நாம் ஏன் பொழுதுபோக்கை ஞானமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்? ஏனென்றால், சினிமா, பாடல், வெப்சைட், புத்தகம், வீடியோ கேம் என நாம் எதைத் தேர்ந்தெடுத்தாலும், அதிலுள்ள விஷயங்களால் நம் மனதை நிரப்ப முடிவு செய்கிறோம். நாம் நடந்துகொள்ளும் விதத்தையும் அவை பாதிக்கின்றன. வருத்தமான விஷயம் என்னவென்றால், இன்று பெரும்பாலான பொழுதுபோக்குகள் யெகோவா வெறுக்கும் காரியங்களோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. (சங் 11:5; கலா 5:19-21) அதனால்தான், யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும் விஷயங்களையே தொடர்ந்து யோசித்துப் பார்க்கும்படி பைபிள் சொல்கிறது.—பிலி 4:8.
எப்படிப்பட்ட பொழுதுபோக்கை நான் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
இன்று இருக்கும் சில பொழுதுபோக்குகள் எப்படிப் பழங்கால ரோமர்களின் வன்முறை விளையாட்டுகளைப் போல இருக்கின்றன?
-
பொழுதுபோக்கை ஞானமாகத் தேர்ந்தெடுப்பதற்குச் சபையில் உள்ளவர்கள் எப்படி இளம் பிள்ளைகளுக்கு உதவி செய்யலாம்?
-
ரோமர் 12:9-ன் அடிப்படையில் நாம் எப்படிப் பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கலாம்?
-
உங்கள் பகுதியில் என்னென்ன நல்ல பொழுதுபோக்குகள் இருக்கின்றன?