Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | கலாத்தியர் 4-6

‘அடையாளப்பூர்வ நாடகமும்’ அதன் அர்த்தமும்

‘அடையாளப்பூர்வ நாடகமும்’ அதன் அர்த்தமும்

4:24-31

திருச்சட்ட ஒப்பந்தத்தைவிட புதிய ஒப்பந்தம் மேலானது என்பதைக் காட்ட பவுல் இந்த “அடையாளப்பூர்வ நாடகத்தை” குறிப்பிட்டார். சக வாரிசுகளோடு கிறிஸ்து செய்யப்போகிற ஆட்சியில் பாவமோ வேதனையோ மரணமோ இல்லாமல் வாழும் நம்பிக்கை எல்லா மனிதர்களுக்கும் கிடைத்திருக்கிறது.—ஏசா 25:8, 9.

 

அடிமைப் பெண்ணாகிய ஆகார்

திருச்சட்டத்தின் கீழ் இருந்த இஸ்ரவேல் தேசம் (அதன் தலைநகரம் எருசலேம்)

சுதந்திரப் பெண்ணாகிய சாராள்

கடவுளுடைய அமைப்பின் பரலோக பாகமாகிய மேலான எருசலேம்

ஆகாரின் ‘பிள்ளைகள்’

இயேசுவைத் துன்புறுத்தி, வெறுத்து ஒதுக்கிய யூதர்கள் (திருச்சட்ட ஒப்பந்தத்துக்குக் கட்டுப்படுவதாக யெகோவாவுக்கு வாக்குக் கொடுத்திருந்தவர்கள்)

சாராளின் ‘பிள்ளைகள்’

கிறிஸ்துவும் பரலோக நம்பிக்கையுள்ள 1,44,000 பேரும்

திருச்சட்ட ஒப்பந்தத்துக்கு அடிமைப்பட்டிருப்பது

இஸ்ரவேலர்கள் பாவத்துக்கு அடிமையாக இருந்ததைத் திருச்சட்டம் ஞாபகப்படுத்தியது

புதிய ஒப்பந்தத்தினால் விடுதலையாவது

இஸ்ரவேலர்கள் பாவிகள் என்பதைத் திருச்சட்டம் உணர்த்தியது, கிறிஸ்துவின் பலியோ பாவத்திலிருந்து விடுதலை தந்தது