“நான் எப்படியெல்லாம் ஆக நினைக்கிறேனோ அப்படியெல்லாம் ஆவேன்”
யெகோவா தன்னைப் பற்றிய சிலிர்ப்பூட்டும் ஒரு தகவலை மோசேயிடம் சொன்னார். எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும், யெகோவாவினால் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற என்னவாக ஆக வேண்டுமோ அப்படியெல்லாம் ஆக முடியும். அதேசமயத்தில், தன்னுடைய உயர்ந்த தராதரங்களை அவர் விட்டுக்கொடுக்க மாட்டார். மனித பெற்றோரைப் போலவே, தன்னுடைய பிள்ளைகளுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய தான் என்னவாக ஆக வேண்டுமோ அப்படியெல்லாம் ஆகிறார்.
யெகோவா என்னை அக்கறையாக கவனித்துக்கொள்ள எப்படியெல்லாம் ஆகியிருக்கிறார்?