Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள் | ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க. . .

மக்களின் இதயத்தைத் தொடுங்கள்

மக்களின் இதயத்தைத் தொடுங்கள்

முழு இதயத்தோடு கடவுளுக்குக் கீழ்ப்படிவது முக்கியம். (நீதி 3:1) அதனால், நம் பைபிள் மாணவருக்கு அவருடைய இதயத்தைத் தொடும் விதத்தில் கற்றுக்கொடுக்க வேண்டும். அதை எப்படிச் செய்யலாம்?

உங்கள் மாணவருக்கு பைபிள் உண்மைகளைச் சொல்லிக்கொடுத்தால் மட்டும் போதாது, அந்த விஷயங்கள் அவருடைய வாழ்க்கையோடும் யெகோவாவோடு இருக்கும் பந்தத்தோடும் எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். பைபிளில் இருக்கும் சட்டதிட்டங்கள், கடவுளுடைய அன்பையும் நீதியையும் மற்ற நல்ல குணங்களையும் எப்படிக் காட்டுகிறது என்பதைப் புரிந்துகொள்ள அவருக்கு உதவுங்கள். கற்றுக்கொள்கிற விஷயங்களைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள அவரிடம் சாதுரியமாகக் கேள்விகளைக் கேளுங்கள். தவறான ஒரு எண்ணத்தையோ கெட்ட பழக்கத்தையோ விட்டுவிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி யோசித்துப் பார்க்க உதவுங்கள். உங்கள் பைபிள் மாணவர் யெகோவாவை மனதார நேசிப்பதைப் பார்க்கும்போது உங்கள் சந்தோஷம் அதிகமாகும்.

சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்—மக்களின் இதயத்தைத் தொடுவதில் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • “திங்கக்கிழம பேசுனத பத்தி ஏதாவது யோசிச்சு பாத்தியா”னு ஜேடிடம் நீட்டா ஏன் கேட்டாள்?

  • ஜேட்மீது அன்பு இருப்பதால்தான் யெகோவா அந்த சட்டங்களைக் கொடுத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள நீட்டா எப்படி உதவினாள்?

  • நம் பைபிள் மாணவருடைய இதயத்தைத் தொடும் விதத்தில் கற்றுக்கொடுக்கும்போது அவரால் கடவுளிடம் நெருங்கிவர முடியும்

    கடவுள்மீது இருக்கும் அன்பை எப்படிக் காட்டலாம் என்று ஜேட் யோசித்துப்பார்க்க நீட்டா என்ன செய்தாள்?