கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
நம்மால் தைரியமாக இருக்க முடியும்!
உறுதியாக, துணிவாக, வீரதீரமாக செயல்படுவதைத்தான் தைரியம் என்று சொல்கிறோம். தைரியமாக இருப்பவர் பயப்படவே மாட்டார் என்று சொல்ல முடியாது. பயத்தின் மத்தியிலும் அவர் உறுதியோடு செயல்படுவார். உண்மையான தைரியம் யெகோவாவிடமிருந்து நமக்குக் கிடைக்கிறது. (சங் 28:7) இளைஞர்கள் எப்படித் தைரியத்தைக் காட்டலாம்?
கோழைகளை அல்ல, தைரியமானவர்களையே பின்பற்றுங்கள்! என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
தைரியத்தைக் காட்ட வேண்டிய என்ன சூழ்நிலைகளை இளைஞர்கள் சந்தித்திருக்கிறார்கள்?
-
தைரியமாக இருப்பதற்கு என்னென்ன பைபிள் உதாரணங்கள் நமக்கு உதவுகின்றன?
-
தைரியமாக நடந்துகொள்வது நமக்கும் அதைக் கவனிக்கிற மற்றவர்களுக்கும் எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?